இருட்டிலிருந்து வெளிச்சம்
இருட்டிலிருந்து வெளிச்சம், அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், புதிய எண்: 243, ஏ. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005. விலை ரூ. 240
சினிமா தொடர்பாக அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இவை வெறும் சினிமா விமர்சனங்களோ, அல்லது திரையுலகம் சம்பந்தமான தகவல் குறிப்புகளோ அல்ல. ஒரு எழுத்தாளன் இந்த பிரமாண்டமான கலையில் எதிர்கொண்ட சில அந்தரங்க தருணங்களைப் பற்றியது இந்த நூல். அந்த தருணங்கள் ஒரு எழுத்தாளனின் நுட்பமான மனதிற்கு மட்டுமே தட்டுப்படுபவை. சினிமாவைப் பொறுத்தவரை நமக்கு முன்னே கடந்து சென்ற மிகப் பெரிய காலகட்டத்தின் பல்வேறு சித்திரங்களை இந்த நூல் எழுப்புகிறது. அசோகமித்திரன் சினிமாவில் பணியாற்றிய அனுபவங்கள், சினிமா உலகம் குறித்த சில அவதானிப்புகள், சில திரைப்பட விமர்சனங்கள், திரைப்பட விழாக்கள், சினிமா ஆளுமைகள் என பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நூல் வேறெங்கும் பதிவு செய்யப்படாத பல அரிய தகவல்களைத் தொடர்ந்து சொல்லிச் செல்கிறது. நன்றி: குங்குமம் 07-01-13