இறையன்புவின் சிறுகதைகள்
இறையன்புவின் சிறுகதைகள், வெ. இறையன்பு, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 125ரூ.
இன்றைய இளைஞர் உலகத்துக்கு எதிர்காலத்தை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ள இவருடைய பேச்சும், எழுத்துகளும் ஒன்றுபோல உத்வேகம் அளிக்கிறது, என்றால் அது ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ. இறையன்புதான். இதுவரை 40 நூல்கள் எழுதியுள்ள இறையன்புவின் 16 சிறுகதைகளின் தொகுப்புதான் நின்னினும் நல்லன். புத்தகத்தை புரட்டும் முன்பே ‘அம்மாவிற்கு காணிக்கை, என்னை எப்போதும் குழந்தையாகவே பார்த்த அந்த மகராசிக்’ என்ற வரிகள் கண்களில் கண்ணீரை ததும்ப வைக்கின்றன. தொடர்ந்து ஒவ்வொரு கதையாக படிக்கும் போது, ஒவ்வொரு கதாபாத்திரமும், அனைவருடைய வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களை மீண்டும் நினைவு கூர வைக்கிறது. சந்தித்த பாத்திரங்கள், தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிய சம்பவங்கள் என்றாலும் இந்த கதைகளைப் படிக்கும் போது பாடம் புகட்டி, வழிகாட்டும் நன்மறைகளாகவே திகழ்கின்றன. ஒவ்வொரு கதையை படித்து முடித்தவுடன் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நன்னெறி மனதில் எப்போது நிற்கும். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.
—-
உங்களில் ஒருவன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
வறுமை காரணமாக மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய மகம் மாமணி, வேலை பார்த்துக்கொண்டே பி.காம் படித்து பட்டம் பெற்றவர். எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையில் முன்னேறியவர். முகம் பத்திரிகையை தொடர்ந்து நடத்தியவர். அவர் தன் வாழ்க்கை வரலாற்றை உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இளைஞர் சமுதாயத்துக்கு இது சிறந்த வழிகாட்டி. நன்றி: தினத்தந்தி, 13/5/2015