சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள்
சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ.
தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள் பாடலுக்கு சிறப்பான இடம் உண்டு. அறிவியல் பார்வைக்கும், ஆன்மிகத்தேடலுக்கும் உறவுப் பாலம் அமைத்து உயர்ந்த கருத்துகளை எளிமையாய் விளக்கியவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர் பாடல்களில் சிந்தை கவர்ந்த பாடல்களை முனைவர் சொ. சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர் போன்ற 24 சித்தர்களின் பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடல்களுக்கும் பொழிப்புரையோ அல்லது விளக்கவுரையோ இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி: தினத்தந்தி, 13/5/2015
—-
நான் கண்ட அருட்செல்வர், ஜி. ஜான்சாமுவேல், ஆசியவியல் நிறுவனம், சென்னை, விலை 100ரூ.
ஆன்மிகவாதி, கலை இலக்கியப் பண்பாட்டுக்காவலர் எனப் பல முகங்களை கொண்டவர் அருட்செல்வர் நா. மகாலிங்கம். இவர் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த மாமனிதர். இவருடைய கலைப்பண்பாட்டு ஆர்வம் மற்றும் பணிகள் குறித்த பல தகவல்கள் அடங்கிய பெட்டகமாகும். நன்றி: தினத்தந்தி, 13/5/2015