நான் கண்ட அருட்செல்வர்

நான் கண்ட அருட்செல்வர், முனைவர் ஜி.ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 121, விலை 100ரூ. அருட்செல்வர் என்று அனைவராலும் அழைக்கப்படும் மறைந்த பெகாள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் நினைவை போற்றம் வகையில், தன்னுடன் அவர் கொண்டிருந்த நட்பையும், பொது தொடர்பையும் வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர். ஆசியிவியல் நிறுவனத்தில் நடந்த, முதல் அனைத்துலக முருகன் மாநாட்டிற்கு, அருட்செல்வர் வழங்கிய ஒத்துழைப்பு முதற்கொண்டு, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில், அவர் கொண்டிருந்த ஈடுபாடு ஒவ்வொன்றும் விளக்கப்பெற்றுள்ளன. அருட்செல்வர் பற்றிய செய்திகளுடன், தமிழ் ஆய்வுச் சிந்தனைகளும், அரிய தமிழ்த் தரவுகளும் […]

Read more

சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள்

சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள் பாடலுக்கு சிறப்பான இடம் உண்டு. அறிவியல் பார்வைக்கும், ஆன்மிகத்தேடலுக்கும் உறவுப் பாலம் அமைத்து உயர்ந்த கருத்துகளை எளிமையாய் விளக்கியவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர் பாடல்களில் சிந்தை கவர்ந்த பாடல்களை முனைவர் சொ. சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர் போன்ற 24 சித்தர்களின் பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடல்களுக்கும் பொழிப்புரையோ அல்லது விளக்கவுரையோ இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். […]

Read more