எழுச்சி பெறு யுவனே

எழுச்சி பெறு யுவனே, தொகுப்பாசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 324, விலை 125ரூ.

பெரும் இளைஞர் சக்தியைக் கொண்ட நம் நாட்டில், அவர்களை வழி நடத்துவது யார் என்பது மிகப் பெரிய கேள்வி. இன்றைய இளைஞர்களில் சிலர் தவறான பாதையில், செல்வதற்கான ஈர்ப்புகள், திசை திருப்பல்கள் அதிகம். ஒட்டுமொத்த இளைஞர் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. எனவே ஒட்டுமொத்த இளைஞர் சக்தியும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கான முயற்சியாக இந்நூல் அமைந்திருக்கிறது. வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கின்ற, சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கிற பலருடைய வாழ்க்கைச் சம்பவங்களை எடுத்துக்காட்டாகத் தந்திருப்பது நல்ல முயற்சி. தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் பிறந்து, விஞ்ஞானியாக வளர்ந்து, குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரித்த சாதனையாளர் அப்துல் கலாம். எல்லா ஆற்றலும் உன்னுள்ளே உள்ளன என்று விவேகானந்தர் கூறியதை சுட்டிக்காட்டியதைப் பதிவு செய்திருப்பது அருமை. இந்திய விண்வெளி சரித்திரத்தில் மிகப் பெரிய மைல்கல் சந்திராயன் 1. அதன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் சந்திரயான் உரை, உலகப் புகழ்பெற்ற மும்மை டப்பாவாலாக்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் இந்நூலில் அடங்கியுள்ளன. நன்றி: தினமணி, 11/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *