ஒரு கதை ஒரு விதை
ஒரு கதை ஒரு விதை, இராம்குமார் சிங்காரம், குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, பக். 112, விலை 90ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024748.html குமுதம் குழுமத்தைச் சேர்ந்த கல்கண்டு இதழில் தொடராக வந்தபோது பெரும் வரவேற்பைப் பெற்ற தன்னம்பிக்கை ஊட்டிய நூல். ஒரு கருத்தைச் சொல்லவும் கேட்பவர், அந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளவும் உதவுபவை கதைகள். உலகப் பேச்சாளர்கள் யாராக இருந்தாலும் தங்கள் கருத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்ய கதை சொல்வதை ஒரு உத்தியாகவே கொண்டுள்ளனர். இதைத்தான் இந்நூலாசிரியர் இராம்குமார் சிங்காரம் கதை என்பது ஒரு பாசிட்டிவான விதை. உங்கள் கருத்துக்களை எங்கெல்லாம் தெளிவாக, ஆழமாக முன்வைக்க விரும்புகிறீர்களோ, அங்கெல்லாம் இந்த விதையைப் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்கிறார். நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் உங்களை மாற்று திசையில் சிந்திக்கத் தூண்டும் விதமாக பிரச்னைகளைச் சொல்லி அந்தக் கதை வழி தீர்த்து வைக்கும் உத்தியை இங்கே நூலாசிரியர் செய்திருக்கிறார். நிறுவனங்கள், நிர்வாகம், குடும்பம் எதுவாக இருந்தாலும் உங்கள் பிரச்னைக்குத் தீர்வு சொல்லும் பல கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒரு நிறுவனத்தின் பிரச்னை பெரிதாக இருக்கும்போது, அதை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து பிரச்னையைத் தீர்க்க யானையின் எடையை அறியும் கதை உதவுகிறது. எப்போதும் வேலையில் ஈடுபாடு உடையவர்களுக்கு எதிர்மறைச் சிந்தனை உருவாகாது என்பன போன்ற கருத்துக்களை இவர் கதை வழி போதிப்பது, பலரது வாழ்க்கைய முன்னேற்ற உதவும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 13/7/2015.