சிற்பியின் படைப்புலகம்
சிற்பியின் படைப்புலகம், முனைவர் இரா. மோகன், முனைவர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 198,விலை 100ரூ.
பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பன்முக படைப்புகளை படம் பிடித்துக் காட்டும் பத்து முத்தான கட்டுரைகளே இந்த புத்தகம். பாரதிதாசன் போற்றிய படைப்பாளியான சிற்பியின் படைப்புத்திறனை தங்கள் ஆய்வு திறத்தாலும் படைத்து அளிக்கும் திறமையாலும், சொல் ஆற்றலாலும், நமக்க விருந்து படைக்கின்றனர். ஆய்வுக் கட்டுரைகள் படிப்போருக்கு இது சுவாரஸ்யம் தரும். சிற்பியின் பல புத்தகங்களை படித்த உணர்வு, இந்த ஒரு புத்தகத்தை படிக்கும்போது கிடைக்கிறது. -ஜிவிஆர். நன்றி: தினமலர், 13/4/2014,