சிலம்பம் படம் பாடம்

சிலம்பம் படம் பாடம், பூ. திருமாறன், டிரஸ்ட் நிறுவனம், 91ஏ, மேற்குத் தெரு, வெங்கடாம்பட்டி, கடையம் வழி, ஆலங்குளம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம், பக். 195, விலை 100ரூ.

தமிழர்களின் தற்காப்புக் கலைகளுள் தலையாயது சிலம்பம். பாரம்பரியமும் பழைமையும் கொண்ட இக்கலையின் நுட்பங்களையும் சூட்சுமங்களையும் நெறிமுறையையும் அதன் ரகசியங்களையும் நூல்வழி கற்றுத் தரும் புதிய முயற்சி இந்நூல். சிலம்பாட்டத்தின் வரலாற்றோடு அதன் நேர்த்தியைச் சொல்லும்போதே அக்கலையை நாமும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. எதிரியின் தாக்குதல்களை சமாளிக்க உதவும் கருங்குருவி நிலை முதல் எதிரிகளை விரட்டி அடிக்க உதவும் அதன் வீச்சு வகைகள், எதிரியின் அடியைத் தடுக்கும் செயல்முறைகள் என்று ஒன்றுவிடாமல், படத்துடன் அதன் செய்முறை விளக்கங்களையும் தந்து ஒரு சிலம்பாட்ட பாடத்தை நேரடியாக கற்றுத் தரும் உணர்வை நூலாசிரியர் ஏற்படுத்தியிருக்கிறார். மறைந்து வரும் கலைக்கு கை கொடுத்து புத்துயிர் ஊட்டியிருக்கிறார் நூலாசிரியர்.  

—-

  செல்வச் செழிப்போடு வாழ்வதற்கு ஒரு குறுக்குவழி ஏற்றுமதி வணிகம், சோமசுந்தரம், கே.எஸ். பப்ளிஷர்ஸ், 43, முதல்மாடி, சுந்தராஜ் தெரு, முதலியார் பேட், புதுச்சேரி, பக். 332, விலை 495ரூ.

வேலையில்லாத் திண்டாட்டத்தில் உழலும் படித்த இளைஞர்களுக்கு உதவும் நூல்.  

—-

 

ஸ்ரீஆண்டாள் காவியம், சக்தி கே. கிருஷ்ணமூர்த்தி, பத்ம சக்தி நிறுவனம், 21 (பி1 31), 10வது தெரு, பெரியார் நகர், சென்னை 82, பக். 176, விலை 100ரூ.

ஸ்ரீ கிருஷ்ய தேவராயர் அருளிய நூல். ஆண்டாள் திருமாலின் மேல் கொண்ட பக்தி காதலாக மாறி எப்படி திருமண பந்தத்தில் முடிகிறது என்று கூறும் நூல். நன்றி: குமுதம், 12/2/1014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *