டாக்ஸி டிரைவர்
டாக்ஸி ட்ரைவர், ஆனந்த் ராகவ், வாதினி, 19/29, ராணி அண்ணா நகர், பி.டி. ராஜன் சாலை (எதிர்ப்புறம்), கே.கே. நகர், சென்னை 78, பக். 172, விலை 120ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-870-8.html
பல்வேறு இதழ்களில் ஆனந்த் ராகவ் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இக்கதைகள் சிறுகதைகள் என்ற ஒரு சட்டத்திற்குள் அடங்கினாலும், உள்ளதை உள்ளபடி நடப்பு உலகையும் மாந்தர்களையும் அவர்களின் அதனதன் சுதந்திரத்தை சுருக்கிவிடாது நம்முன் விசாலமாகவே காட்சிப்படுத்துகிறார். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் விநோத விளையாட்டுக்களை அதன் அசல் பதிவாக தந்துவிட்டுப் போகிறார். நகரம், நகரம் சார்ந்த பிரச்சினைகள், அதன் செயலற்ற தன்மை, செயற்கையான நடப்பு என்று அத்தனை சிறுகதைகளிலும் தன் குரலை உயர்த்திக் காட்டியிருக்கிறார். வாசிப்பின் ஊடே நம்மை வெளியேற்றிவிடாத உள்ளிழுப்பு உத்தியாக கதைகளினூடே நகைச்சுவை உணர்வை ஊடாடவிடுவது ஆசிரியரின் வெற்றி. நன்றி:குமுதம், 26/3/2014.
—-
சாம்ராட் ஹைதரலியின் சபதம், மணிமேகலைப் பிரசரம், 7-4, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 350ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-8.html
நம் இந்திய நாட்டுக்கு வாணிபம் நடத்த வந்து, பின்னர் நாடாள்பவர்களாக மாறிய ஆங்கிலேய, பிரெஞ்சுக் கம்பெனியாரை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்திய வீரவேந்தர்கள் பலர். அவர்களுள் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூரை ஆண்ட மன்னன், சாம்ராட் ஹைதரலியின் சபதத்தை மையமாகக்கொண்டு படைக்கப்பட்ட நாவல். தன் சூளுரைக்காக அவன் நிகழ்த்திய போர்களையும், அவற்றால் அல்லலுற்ற தமிழக மக்களின், குறிப்பாக வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் சமூக வாழ்க்கையினையும் படம் பிடித்துக் காட்டும் வரலாற்று புதினம். கிராம வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்று புதினமாதலால் அக்காலக் கல்வி, கலைகள், சமயம், சமுதாயம், குடும்பம், மகளிர் நிலை, மக்கள் நிலை, அரசியல் நிலை, வாழ்க்கை முறை ஆகியவற்றை படம் பிடித்து காட்டியுள்ளார்கள் முனைவர் மா.சு. சாந்தாவும், பேராசிரியர் மா.சு. அண்ணாமலையும். நன்றி: தினத்தந்தி, 19/3/2014.