தமிழ் மக்கள் வரலாறு இக்காலம்

தமிழ் மக்கள் வரலாறு இக்காலம், தமிழ்க்கோட்டம், விலை 140ரூ.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன், தமிழ் மக்கள் வரலாற்றை இதுவரை 8 புத்தகங்களாக எழுதியுள்ளார். கடைசிப்பகுதியான 9வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. காலமாறுபாட்டால் தமிழர்களின் வாழ்விலும், பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை இதில் விவரிக்கிறார். தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பெருந்தடையாக இருப்பது சாதிப்பிரிவினையே என்று கூறுகிறார். “இன்றைக்கும் தன்னை வழி நடத்தக்கூடிய தமிழனை சினிமாத் துறையிலேயே தமிழன் தேடுகிறான்” என்று சுட்டிக்காட்டுகிறார். தமிழரிடம் காணப்படும் குறைபாடுகளை, குட்டவும் செய்கிறார், தன் மோதிரக் கையால்! அனைவரும் படிக்கவும், பாதுகாக்கவும் வேண்டிய அரிய நூல். நன்றி: தினத்தந்தி, 9/3/2016.  

—-

புலவர் திலகம் கீரன் ஒரு சகாப்தம், செல்லப்பாப்பா கீரன், பழனியப்பா பிரதர்ஸ், விலை 325ரூ.

சிறந்த சொல்வன்மையும், நாவன்மையும் பெற்றிருந்த புலவர் கீரனின் வாழ்க்கை குறிப்புகளை, அவரது மனைவியும், எழுத்தாளருமான செல்லப்பா கீரன் திறம்பட எழுதியுள்ளார். புலவர் கீரன் எழுதிய கட்டுரைகள், அவரைப் பற்றி சான்றோர் பலர் அளித்திருக்கும் நற்சான்றுகளும் இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *