திரைப்படத் தணிக்கை முறை

திரைப்படத் தணிக்கை முறை, கமர்ஷியல் கிரியேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ.

திரைப்படங்களை எடுத்து முடித்தபின், பட அதிபர்களை எதிர்நோக்கி இருக்கும் அடுத்த முக்கியமான வேலை, படத்தை தணிக்கை (சென்சார்) குழுவுக்கு அனுப்பி சர்டிபிகேட் வாங்குவதாகும். ஆபாசம் என்றும், ஆட்சேபகரமானவை என்று தணிக்கைக் குழுவினர் கருதுகிற காட்சிகளை, வெட்டி எறிந்து விடுவார்கள். தணிக்கைக் குழுவின் முடிவு அநீதியானது என்று பட அதிபர் கருதினால், அதை எதிர்த்து அப்பீல் செய்யலாம். இதை எல்லாம் விளக்கமாக கூறுகிறது. நாம் அறிந்து கொள்வோம் – திரைபடத் தணிக்கை முறை என்ற இந்த நூல். இதனை தொகுத்தவர் பிரபல நடிகர் எஸ்.வி.சேகர். மொழியாக்கம் செய்தவர் வேதா கோபாலன். தணிக்கை விழிகள் பற்றி இதுபோன்ற புத்தகம் இதற்குமுன் வந்தது இல்லை. திரைப்படத்துறையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள கையேடு. நன்றி: தினத்தந்தி, 14/10/2015.  

—-

ஆரோக்கியம் தரும் யோகாசனம், கவியோகி வேதம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 110ரூ.

யோகாசனங்கள் செய்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். நோய் வரலாமல் தடுக்கலாம். பலவித யோகாசனங்களை செய்யும் முறை, இப்புத்தகத்தில் படங்களுடன் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 14/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *