நல்ல உரைநடை எழுத வேண்டுமா? தொகுதி 1

நல்ல உரைநடை எழுத வேண்டுமா? தொகுதி 1, புலவர் மா. நன்னன், ஏகம் பதிப்பகம், இரண்டு தொகுதிகள் சேர்ந்து விலை 1250ரூ.

தமிழைப் பிழை இல்லாமல் எழுத வேண்டும். பிறமொழிக் கலப்பின்றி எழுத வேண்டும் என்பதில் பெரு விருப்பம் கொண்டவர் பேராசிரியர், புலவர் மா. நன்னன் ஆவார். எழுத்தாளர்கள், தாம் ஆளும் சொற்களின் திறத்தை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். தக்க இடத்தில், தக்க சொல்லைப் பயன்படுத்துவதைப் பொறுத்தே அந்த உரைநடையின் பயன், தரம் போன்றவை விளங்கும். அந்த வகையில் நல்ல உரைநடையை எழுதுவதற்கு இந்த நூல் விரிவாகச் சொல்லித் தருகிறது. “இந்த நூல் முழுவதும் புலவர் நன்னன் வழங்கும் பல்வேறு விளக்கங்கள் வாயிலாகத் தமிழில் எழுதுவோர் தக்க இடத்தில், தக்க சொல்லை பெய்து எழுதினால் தமிழ் நடையின் தரம் உயரும். எழுதுவோரின் திறனும் மிளிரும். படிப்பவர்க்கும் எளிதில் பொருள் விளங்கும் என்பது உறுதி” என்று கலைஞர் கருணாநிதி அணிந்துரையில் கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *