நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம், பா. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி3, வசந்தம் அபார்ட்மெண்ட், 1/338, சபரிசாலை, மடிப்பாக்கம், சென்னை 91, பக். 84, விலை 60ரூ.

உலகில் தோன்றிய பழைமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. பல நாகரிகங்கள் மறைந்துபோன நிலையில் இந்திய நாகரிகம் மட்டுமே இன்றைக்கும் புதுமைத் தன்மையுடன் விளங்குகிறது. அதற்குக் காரணம் இந்து தர்மம். அதன் உண்மைத்தன்மையும் விஞ்ஞான மெய்ஞான அடித்தளமுமே அதற்குக் காரணம் என்று நிறுவுகிறார் நூலாசிரியர் இலட்சுமணன். புஷ்பவிமானம், பிரம்மாஸ்திரம், மழை நீர் சேகரிப்பு என்று நம் தேசம் பற்றி பெருமிதம் கொள்ளச் செய்யும் செயல்களை பட்டியலிடுகிறார். இந்தியா மற்றும் இந்துமதம் பற்றிய வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்கள் கருத்துக்கள், குமரிக்கண்டம், பாரதத்தின் விஞ்ஞான சாதனைகள் என்று பல பெருமைமிகு அம்சங்களை ஆய்வு நோக்கில் கண்டு உணர்ந்து இந்தியா வளர்கிறது, வல்லரசாகிறது என்று நிறுவுகிறார் ஆசிரியர்.  

—-

 

பாரதி ஒரு திருப்புமுனை, முனைவர் அ. அறிவு நம்பி, சித்திரம், 15, கலைவாணி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி 8, பக். 132, விலை 75ரூ.

பாரதி பற்றிய திறனாய்வுகள் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருக்கும் காலம் இது. அந்த வகையில் பாரதி பற்றிய 10 திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. தமிழிலக்கிய மரபில் பாரதி ஒரு திருப்புமுனையாக திகழ்வதை எடுத்துக்காட்டி, கண்ணன் பாடல்களில் பாரதியின் அனுபூதி தன்மையை விளக்குகிறார் அறிவுநம்பி. சாதி வேறுபாடகளைக் களையும் பாரதியையும் மேலைநாட்டரின் தாக்கத்தால் அவரது படைப்புகளில் மிளிரும் ஆளுமை விளக்கப்பட்டுள்ளது. கல்வி, அறிவு, தெழில் துறையில் பாரதி வழியில் பாரதம் நிகழ்த்தியுள்ள சாதனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தெய்வங்களைப் பாடிய பழைய பாரதியிடம் குழப்பம் இருப்பதாக வரும் கருத்துக்களுக்கு இறை ஒருமைக்குப் பாரதி வழிகாடடுவதாக முற்றுப்புள்ளி வைக்கிறார் ஆசிரியர். எளிய மொழி நடை, யாவரும் விளக்கும் கருத்தச் செறிவுடன் பாரதி பற்றிய புரிதல் படிப்போருக்கு எளிதாகக் கிடைக்கச் செய்யும் நூல் இது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 12/6/13

Leave a Reply

Your email address will not be published.