பழந்தமிழ் நூல்கள் தற்காலத்திற்கும் வழிகாட்டி நூல்கள்

பழந்தமிழ் நூல்கள் தற்காலத்திற்கும் வழிகாட்டி நூல்கள், ச.லோகம்பாள், சுந்தர்லோக் வெளியீடு, பக். 80, விலை 150ரூ.

எந்த மொழியையும் சாராது தனித்தன்மையுடன் விளங்கும் தமிழ் மொழியின் சிறப்பை, இந்த நூல் விளக்குகிறது. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் தனிப்பெரும் சிறப்புகள், மானுடத்தை நன்னெறிப்படுத்தும் ஒரே இலக்கில் நிற்கின்றன. ‘வால்மீகி ராமாயணமும், பாரதமும் வடநாட்டிலிருந்து தமிழர்கள் ஏற்றுக்கொண்டனர். ராமனும், கண்ணனும் தலைவர்களாகவே தமிழர்களால் சுட்டப்பட்டுள்ளனர். சைவம் ஒன்றே தென்னகத்திற்கு உரியது’(பக். 16), ‘மரபு சார்ந்த தமிழ் நூல்களே, தமிழர் நன்னெறி வாழ்வு என்னும் வாடாத பயிருக்கு ‘வாழ்முள்வேலி’ பாதுகாப்பாக உள்ளது’ (பக். 25) தமிழரின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், இறப்புச் சடங்குகள் பற்றிய தொன்மை இலக்கியச் செய்திகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. பழந்தமிழரின் தொன்மைகள் பலவும், இன்றைய புதுமைகளாக வலம் வருவதை நூல் தெளிவாக்குகிறது! -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர்,14/2/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *