அகச்சுவடுகள்
அகச்சுவடுகள், கவிதாயினி அமுதா பொற்கொடி, வானதி பதிப்பகம், விலை 200ரூ.
கவிதாயினி அமுதா பொற்கொடி எழுதிய கவிதைகளின் தொகுப்பு. “வல்லினமின்றி மெல்லினமின்றி இடையினமாய் அவதரித்தவள் நான்” என்று திருநங்கைகளைப் பற்றி பாடும்போதும், ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தலைப்பில் ‘கலாவதி ஆனது நல வாழ்வு, கண்ணீரில் மிதக்குது பலர் வாழ்வு’ என்று மதுக்கடை பார்’ குறித்து சொல்லும்போதும் இவரது சொல்லாடல் நம்மை ரசிக்க வைக்கிறது. இந்தக் கவிதைத் தொகுதியில், அவர் சமூகக் கேடுகளையும், கலாச்சார சீரழிவுகளையும் சாடுகிறார். அவரது ஆழ் மனதின் உள்ளே உள் வாங்கி இருக்கும் ஆதங்கங்களைப் பாடுகிறார். ஆர்ட் காகிதமும், அழகிய அச்சும் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது என்றால் அது மிகையல்ல. நன்றி: தினத்தந்தி, 10/2/2016.
—-
நாட்டுக்கோட்டை நகரத்தார் அன்றும் இன்றும் என்றும், தொகுப்பாசிரியர் சிவஸ்ரீ வி.ஆர்.கே. சிதம்பரம், ஆனந்த நிலையம் வெளியீடு, விலை 300ரூ.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் செட்டிநாட்டில் உள்ள ஊர்களுக்கு அஞ்சல் குறியீடு எண், குலதெய்வம், பள்ளிகள், கோவில்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய பொக்கிஷமாக இந்த நூல் திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 10/2/2016,