அகச்சுவடுகள்

அகச்சுவடுகள், கவிதாயினி அமுதா பொற்கொடி, வானதி பதிப்பகம், விலை 200ரூ. கவிதாயினி அமுதா பொற்கொடி எழுதிய கவிதைகளின் தொகுப்பு. “வல்லினமின்றி மெல்லினமின்றி இடையினமாய் அவதரித்தவள் நான்” என்று திருநங்கைகளைப் பற்றி பாடும்போதும், ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தலைப்பில் ‘கலாவதி ஆனது நல வாழ்வு, கண்ணீரில் மிதக்குது பலர் வாழ்வு’ என்று மதுக்கடை பார்’ குறித்து சொல்லும்போதும் இவரது சொல்லாடல் நம்மை ரசிக்க வைக்கிறது. இந்தக் கவிதைத் தொகுதியில், அவர் சமூகக் கேடுகளையும், கலாச்சார சீரழிவுகளையும் சாடுகிறார். அவரது ஆழ் மனதின் உள்ளே உள் […]

Read more

நாட்டுக்கோட்டை நகரத்தார்

நாட்டுக்கோட்டை நகரத்தார், சீத்தலை சாத்தன் (சுப்ரமணிய வெங்கடாச்சலம்), ஆனந்த நிலையம், 7/14, புதூர் முதலாவது தெரு, அசோக்நகர், சென்னை 83, விலை 500ரூ. நகரத்தாரின் வழிபாடு, வாழ்க்கை முறை, கல்வி, அரசியல், தொழில், பழக்க வழக்கங்கள், திருமண முறைகள் குறித்த அபூர்வ தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். இதில் நகரத்தார் வீடுகள், கோவில்களின் வண்ணப்படங்கள் அழகுற பிரசுரிக்கப்பட்டு உள்ளன. நகரத்தார் ஊர்களின் வரைபடம், தபால் நிலையங்களின் எண்ணங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் நகரத்தார் அடிக்கடி பிறந்த மண்ணுக்கு வரவேண்டும் என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தார் […]

Read more