பாரதத்தில் ராஜதர்மம்

பாரதத்தில் ராஜதர்மம் அன்றும், இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை 17, பக். 456, விலை 250ரூ.

ஆட்சியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய உயரிய நெறிமுறைகளே ராஜதர்மம் எனப்படுவது. போற்றத்தக்க இத்தகைய நெறிமுறைகளை உருவாக்கி, அவற்றை உலகிற்கு முதன் முதலில் போதித்தது பாரத நாடு என்று கூறும் இந்நூலாசிரியர், அவை குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார். இதற்கு ராமாயணம், மகாபாரதம், சுக்ர நீதி, அர்த்த சாஸ்திரம் போன்ற ஹிந்து தர்ம நூல்கள் முதல், திருக்குறள், அகநானூறு, புறநானூறு போன்ற சங்க கால நூல்கள் வரை பல்வேறு நூல்களில் கூறப்பட்ட ராஜதர்ம நெறிகளையும், அவற்றையொட்டிய புராண மற்றும் சரித்திர கால மன்னர்களின் செயல்பாடுகளையும் எடுத்துக் கூறுகிறார். அத்துடன் இன்றைய மத்திய மாநில அரசுகளை ஆள்பவர்களின் செயல்பாடுகளையும், அந்தந்த இடங்களுக்கு ஏற்ப சுட்டிக்காட்டி, இன்றைய அரசியல் குறித்த விமர்சனங்களையும் இந்நூலில் எழுதியுள்ளார். இதன் மூலம் நம் பாரதத்தில் அன்று இருந்த ராஜதர்மத்திற்கும், இன்றுள்ள ராஜதர்மத்திற்கும் உள்ள வேறுபாடுகளை இந்நூலில் தெளிவாக அறிய முடிகிறது. -பரக்கத். நன்றி: துக்ளக், 27/12/2012.

Leave a Reply

Your email address will not be published.