மகாபாரதம்
மகாபாரதம், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சென்னை புக்ஸ், சென்னை, பக். 328, விலை 175ரூ.
நமது பாரம்பரியப் பொக்கிஷமான மகாபாரதத்தில், எல்லா காலத்துக்கும் பொருந்தும் வழிகாட்டுதல்கள் நிறைந்துள்ளன. அதர்மமும், ஆவணமும் அழிவை ஏற்படுத்தும், நற்பண்புகளே நல்ல வாழ்க்கையை வழங்கும், தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும் மறுபடியும் தர்மம் வெல்லும் ஆகியவை போன்ற ஒப்பற்ற அறிவுரைகளை கதைப்போக்கிலேயே வழங்கும் மகாபாரதம், படிப்பவர்களிடம் பொறுமை, சகிப்புத்தன்மை, ஆத்ம சக்தி ஆகியவற்றை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும், இந்த இதிகாசத்தை, இனிமை நிறைந்த நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் கள்ளிப்பட்டி சு. குப்புசாமி. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல். -முரளி. நன்றி: தினமலர், 9/4/2014.
—-
கோச்சடையான், கௌதம நீலாம்பரன், குமுதம் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-800-5.html புலிகேசி மன்னன் புதல்வனை, தமிழ் மண்ணில் கோச்சடையான் வென்றதை விவரிக்கும் சரித்திர நாவல். நன்றி: குமுதம் ரிப்போர்டர், 29/5/2014.