மாணவர்களுக்கு வள்ளுவர்

மாணவர்களுக்கு வள்ளுவர், என். வீரகண்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 168, விலை 100ரூ.

இந்த நூலில், அறத்துப் பால், பொருட்பால் ஆகியனவற்றில் இடம் பெற்றுள்ள, 108 அதிகாரங்களில் உள்ள, 1080 குறட்பாக்களின் எளிய, இனிய உரைகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கற்கக் கசடற என்ற குறளை, கற்க வேண்டிய நூல்களை மிகத் தெளிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் கற்ற கல்விக்குத் தக்கபடி நல்வழியில் வாழ வேண்டும் என்று சொல்கிறார். மாணவ, மாணவியர் படித்துப் பயன் பெறலாம். -எஸ். குரு.  

—-

 

ஐஸ்டிஸ் ஜெகதீசன், ராணிமைந்தன், கலைஞர் பதிப்பகம், பக். 208, விலை 200ரூ.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசனின் வாழ்க்கை வரலாறு. இந்த நூலில் சுவைபட எழுதப்பட்டுள்ளது. கனிவும், கண்டிப்பும் மிக்க இவர், வழக்காளர்களின் வீண் அலைச்சல், வீண் செலவுகள், வீணாகும் நேரங்களை மனதில் கொண்டு, விரைந்து நீதி வழங்கிய அனுபவங்கள், படிப்பவரை சிந்திக்க வைக்கின்றன. கடந்த 30 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 9 ஆண்டுகள் நீதிபதியாகவும் இருந்தார். ஓய்வுக்குப் பின் இந்திய அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதல் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். சமூக சேவையில் ஆர்வம் மிக்க, இவர் எத்திராஜ் மகளிர் கல்லூரித் தலைவராக, பத்தாண்டுகள் இருந்து கல்விப் பணியாற்றியுள்ளார். அட்வகேட் ஜெனரலாக இருந்தபோது, இவர் மேற்கொண்ட துணிச்சலான, ராஜினாமா சம்பவம், நேர்மைக்கு சான்று கூறும். மிகவும் பரபரப்பான, அதிமுக்கியமான வழக்குகளில், சிறிதும் மனசாட்சி தடுமாறாமல் இவர் வழங்கிய தீர்ப்புகள், நீதிமன்றத்தில் ஆவணமாக நூல்களில் உள்ளன. நீதிபதியின் ஆத்ம சோதனை ஆவண நூல். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 19/1/14.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *