மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள், ம. லெனின், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 296, விலை 185ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-211-7.html

மனிதமூளை ஓர் அற்புதமான இயந்திரம். அதை முறைப்படி கையாண்டால் யாராக இருந்தாலும் சாதனையின் சிகரத்தை அடைய முடியும் என்பதை நூலாசிரியர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். மூளையை முறைப்படி கையாளுவதற்கு புத்தகத்தில் கூறப்பட்டுள்ள 300 பயிற்சிகளும் சிறப்புக்குரியவை. அவற்றுடன் தொடர்புபடுத்தி கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளும், படங்களும் புத்தகத்தைப் படிப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையில் நாம் வித்தியாசமாகச் செய்யும் சிறிய சிறிய செயல்கள்கூட சாதனைதான். பெரிய செயல் மட்டுமே சாதனை என்று கூறிவிட முடியாது என்பதை நூலாசிரியர் புத்தகத்தின் பல இடங்களில் நினைவுபடுத்தி, தன்னம்பிக்கையை வலுப்படுத்துகிறார். உண்மையிலேயே இந்தப் புத்தகத்தை உருவாக்கியதன் பின்னணியில் நூலாசிரியரின் கடினமான உழைப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. புத்திசாலி அவதாரம் எடுக்க வேண்டும் என்று விரும்பும் யாராக இருந்தாலும் இந்தப் புத்தகத்தைப் படித்து, கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை செவ்வனே செய்துவந்தால், அவர்களுடைய கனவு நனவாவது உறுதி. நன்றி: தினமணி, 24/2/2014.  

—-

வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், 12/28, சவுந்தர்ராஜன் தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 130ரூ.   To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html

தலைமுறைகளைக் கடந்து ஜெயித்த தமிழ்த் திரையுலகப் பாடலாசிரியர் மறைந்த வாலி. இவர் சந்தித்த அரசியல், சினிமா ரகசியங்கள் பல இருந்தாலும் அவற்றில் 100 சம்பவங்களை தொகுத்து நூலாக்கப்பட்டு உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள எம்.ஜி.ஆருக்கு பிடித்த கவிதை வரிகள் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. அதேபோல் ஈழத்தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து, புலால் திண்ணும் புத்தன் என்ற தலைப்பில் எழுதிய கவிதை கண்ணீரை வரவழைக்கிறது. கோபாலபுரமும், ராமாபுரமும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட செய்தியில் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டியதையும் தெளிவு பட கூறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு மனிதனின் வெற்றியை தலைக்கு கொண்டு போககூடாது. தோல்வியை இதயத்திற்கு கொண்டு போக கூடாது என்ற வாலியின் பல அனுபவ மொழிகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 12/3/2014.

Leave a Reply

Your email address will not be published.