யாத்திரை போகலாம் வாங்க
யாத்திரை போகலாம் வாங்க, ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10,விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-5.html
கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் தொடங்கி உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி, ஹரித்துவார் என நீண்டு ரிஷிகேஷ் வரை உள்ள கோயில்களின் ரவுண்அப். தல வரலாறு, எப்படிபோவது, எங்கே தங்குவது போன்ற அ முதல் ஃ வரை தகவல்களோடு ஹரித்துவாரில் ஆஞ்சநேயரின் அம்மாவுக்கு தனிக்கோயில் உள்ளது என்பது மாதிரி இதுவரை நாம் கேள்வியே பட்டிராத பல அரிய விஷயங்களையும் சொல்லி யாத்திரை கூட்டிச் செல்லும் நல்ல நூல்.
—-
ஸ்ரீ அரவிந்தரின் விடுவிக்கும் பெரிசியஸ், தமிழாக்கம் சிவ சூரிய நாராயணன், குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, விலை 150ரூ.
நமக்கு சரஸ்வதி எப்படியோ அதே போல் கிரேக்கர்களுக்கு அதினித் தேவிதான் கலைமகள், அந்த அதினித் தேவியின் பிரதிநிதியான பெர்சியஸ் என்னும் வாலிபனைப் பற்றிய பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தரின் பெர்ஸியஸ் தி டெலிவிரர் என்ற ஆங்கில நாடகத்தின் தமிழாக்கமே இந்த நூல். இதில் சிறப்பு, நாடகம் முழுவதையும் சுவாரஸ்ய கவிதை நடையில் தமிழாக்கம் செய்து தந்துள்ளதுதான். நன்றி: குமுதம் சிநேகிதி, 16 டிசம்பர் 2011