பொது அறிவு பொக்கிஷங்கள்

பொது அறிவு பொக்கிஷங்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 17, விலை 40ரூ.

மாணவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய 3 பொது அறிவு நூல்களை விஜயவர்மன் எழுத நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கான பொது அறிவுக் கையேடு மாணவர்களுக்கான பொது அறிவு பொக்கிஷம், எல்லோரும் அறிய வேண்டிய அரிய தகவல்கள் என்ற தலைப்புகளில் இப்புத்தகங்கள் வெளிவந்துள்ளன. பயனுள்ள புத்தகங்கள்.

—-

 

நிகரில்லா தலைவன் சேகுவேரா, மகா பதிப்பகம், 3, சாய்பாபா கோவில் தெரு, கவுரிவாக்கம், சென்னை 73, விலை 50ரூ.

கியூபா நாட்டின் விடுதலைக்காக போராடி வெற்றி கண்ட சேகுவேராவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து கூறும் புத்தகம். எங்கெல்லாம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போர் முழக்கம் கேட்கிறதோ அங்கெல்லாம் நேரில் சென்று அப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன் வாழ்நாளை அர்ப்பணித்த சேகுவேராவின் போராட்டங்கள் குறித்தும், அவருடைய இறுதி நாட்கள் குறித்தும் சுவைப்பட தொகுத்துள்ளார். ஆசிரியர் இதயா ஏகராஜ்.  

—-

ஆறுமுகனின் அறுபடை வீடுகள், விவேகப்பிரியன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை 17, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-7.html

முருகனின் அறுபடை வீடுகள் பற்றிய தகவல்கள் உள்ளன. அத்துடன் அறுபடை வீடுகளுக்கான சஷ்டி கவசப்பாடல்களும் உள்ளன. முருக பக்தர்கள் கையில் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 14 மார்ச் 2012.

Leave a Reply

Your email address will not be published.