நெஞ்சின் அலைகள்
நெஞ்சின் அலைகள், மைதிலி சம்பத், முத்து நிலையம், பி 4/2, பிளாட் 52, அம்மையப்பன் தெரு, இராயப்பேட்டை, சென்னை 14, விலை 110ரூ
சிறுகதையாசிரியராக அறியப்பட்ட மைதிலி சம்பத் இந்த நூல் மூலம் நாவலாசிரியராக வெளிப்படுகிறார். நாவலின் இயல்பான கதாபாத்திரங்கள் அவர்கள் பேசும் வசனங்கள் நாவலுக்கு உயிரோட்டமான நடையைத் தந்து வாசிப்புக்கு வேகம் கூட்டுகின்றன.
—-
வானமே உன் எல்லையென்ன?. ரா. நிரஞ்சன் பாரதி, லலிதா பாரதி பதிப்பகம், 72/13, ஏபி பிளாக் 3வது தெரு, அண்ணா நகர், சென்னை 40, விலை 35ரூ.
கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பாரதியாரின் எள்ளுப் பேரனான நிரஞ்சன் பாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு இது. நிரஞ்சன் பாரதிக்குள் இன்னொரு சுப்ரமணி பாரதி ஒளிந்து கொண்டிருக்கிறார் என இந்த நூலின் வாழ்த்துரையில் கவிஞர் வாலி குறிப்பிடுகிறார். அதை ஏற்றுக் கொள்ள வைக்கும் விதமாக பல சிறப்பான கவிதைகள் அடங்கிய நூல்.
—-
குழந்தைகள் உலகம் உள்ளே… வெளியே, மு. முருகேஷ், யுரேகா புக்ஸ், 4903, கோபாலபுரம் சென்னை 86, விலை 40ரூ
உலகத்தைவிடப் பெரியது குழந்தைகளின் உலகம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு விரிந்து பரந்து சுவாரஸ்யங்கள் கொண்டது அவர்களின் உலகம். அந்த உலகத்துக்குள் கொஞ்ச தூரம் பயணித்து அங்கிருந்து கிடைத்த அனுபவங்களை 25 தலைப்புகளில் சுவைமிகு கட்டுரைகளைகத் தந்துள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம் சிநேகிதி, 16 டிசம்பர் 2011