விளையாட்டு விஞ்ஞானம்
விளையாட்டு விஞ்ஞானம், அ.சுப்பையா பாண்டியன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 125 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-843-6.html
இயற்பியலில் உயர் பட்டங்களைப் பெற்ற பேராசிரியரான இந்நூலாசிரியர், தமிழக அரசின் அறிவியல் பாட நூல்களுக்குக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். இவர் பொதிகை, மக்கள் தொலைக்காட்சி போன்றவற்றில் பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தி, விஞ்ஞானத்தை விளையாட்டாக எளிதில் புரியவைத்தவர். அவர் டி.வி.யில் செய்து காட்டிய பல்வேறு அறிவியல் நிகழ்ச்சிகளில் 70க்கு மேற்பட்ட சிறப்பானவற்றை, உரிய புகைப்பட மற்றும் செய்முறை விளக்கத்துடன் இந்நூலில் எளிய முறையில் விளக்கியுள்ளார். ஒரு பாட்டிலுக்குள் சூறாவளியை எப்படி உருவாக்குவது, அந்தரத்தில் பந்தை எப்படிச் சுழலச் செய்வது, பலூன் ராக்கெட்டை எப்படி உருவாக்குவது, வாழைப்பழத்தை எப்படி சுத்தியலாக மாற்றுவது, தீயால் சுட்டாலும் வெடிக்காத பலூனை எப்படி உருவாக்குவது… இப்படி ஏராளமானவை இந்நூலில் செய்முறை விளக்கத்துடன் தொகுக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் நூல் இது. – பரக்கத் நன்றி: துக்ளக் 28.11.12