வேலை பெறத் தயாராகுங்கள்

வேலை பெறத் தயாராகுங்கள், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை, விலை 150ரூ.

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது நமது நாட்டில் படித்த இளைஞர்களுக்கு தடைக்கல்லாகவும், பெரும் சவாலாகவும் உள்ளது. அறிவும், திறமையும் உள்ள மாணவர்களுக்கு உகந்த வேலை இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அதைப் பெற இயலவில்லை. இதைப் போக்கும் வகையில் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி எம். கருணாகரன், தினத்தந்தி இளைஞர் மலரில் எழுதிய கட்டுரைகள் இப்போது நூலாக வெளிவந்துள்ளது. வேலை பெறுவதற்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. கூடுதல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த நூலில் ஆசிரியர் வலியுறுத்துகிறார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத் தேர்வுகள், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள், வங்கிப் பணிகள், ராணுவப் பணிகள் என்பன போன்ற 23 தலைப்புகளில் எழுதியுள்ள கட்டுரைகள் வேலை தேடும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி: தினத்தந்தி, 17/9/2014.  

—-

எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம், ஆப்பிள் பப்ளிஷிங் இண்டர்நேஷனல், சென்னை, விலை 45ரூ.

எழுத்தாளர் சோம. வள்ளியப்பன் சிறு வியாபாரிகள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை கருத்துக்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். வியாபார நிர்வாகம் தொடர்பான தகவல்கள் எளிய நடையில் தக்க உதாரணங்களுடன் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 17/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *