அகம் புறம் அந்தப்புரம்
அகம் புறம் அந்தப்புரம், முகில், சிக்ஸ்த் சென்ஸ், பக். 1032, விலை 999ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-202-3.html அந்தப்புரத்திற்கு எத்தனை பெயர்கள் நபா, தோல்பூர், அல்வார், பரத்பூர், ஐதராபாத், இந்தூர், கபுர்தலா, புதுக்கோட்டை, பரோடா, பாட்டியாலா, மைசூர், ஜெய்ப்பூர் ஆகிய இந்திய சமஸ்தானங்களின் வரலாறுகளையும், ஒவ்வொரு மகாராஜாவின் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து கிடக்கும் செய்திகளையும், காலனியாதிக்க காலகட்டத்தையும் குறித்து, நூலாசிரியர், குமுதம் ரிப்போட்டர் வார இதழில், தொடராக எழுதியது, தற்போது ஒரே நூலாக வெளிவந்திருக்கிறது. 1527ல் தோல்பூரை முகலாய பேரரசர் பாபர் கைப்பற்றினார். கிட்டத்தட்ட 180 வருஷங்கள் தோல்பூர் முகலாயர்களிடம் இருந்தது. அப்போதுதான், ஷாஜஹான், தலப் இ- ஷாஹி ஏரியை உருவாக்கிய சமாசாரமெல்லாம் நடந்தது (பக். 58). கொச்சின் திவானை சந்திக்க ஓர் அறிமுக கடிதத்தையும், கொச்சின் வரை தண்டவாளம் முளைக்காததால், சோரனூருக்கான ரயில் பயணச் சீட்டையும் கொடுத்து, விவேகானந்தரை வழியனுப்பி வைத்தார் சாமராஜேந்திரர் (பக். 879). ஏராளமான வரலாற்றுச் செய்திகளை கொண்ட, சமஸ்தானங்களை, இந்திரா அரசு, மன்னர் மானிய ஒழிப்பின் மூலம், மன்னர்களின் ஆடம்பரத்தை பறித்துவிட்டோம். ஆனால் அவர்கள் மனிதர்களாக வாழ வாய்ப்பு கொடுத்திருக்கிறோம் (பக். 1008) என்று கூறியதும், பெரும்பாலான ராஜ குடும்பத்தினர், காங்கிரசில் அடைக்கலம் புகுந்தனர் என்பதை, நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். சினிமா பாடல்களை குறிப்பிட்டிருப்பதை தவிர்த்து, இன்னும் வரலாற்று தகவல்களை, ஆசிரியரால் தந்திருக்க முடியும். ‘திரைக்கு அந்த பக்கம் இருக்கும் பெண்கள் நிறைந்த பகுதியை பொதுவாக, புர்தா என்பார்கள். முகலாயர்கள், ஜெனானான என்றழைப்பர். இந்தியாவில், இந்து மன்னர்கள், anduran என்று சொல்லுவர். தமிழில் அதற்கான சுந்தர வார்த்தை அந்தப்புறம்.(பக். 267-269).’ -பின்னலூரான். நன்றி: தினமலர், 6/7/2014.
—-
இன்ஷுரன்ஸ் புதையலா பூதமா?, ஞானசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், சென்னை.
ஆயுள் காப்பீடு எனும் இன்சூரன்சின் முக்கிய நோக்கமே ஒருவரின் குடும்ப நலனும், ஓய்வு கால பாதுகாப்பும்தான். அவருக்கு பின் அவரது குடும்பத்தினருக்கு உதவும் என்று, எதிர்கால நம்பிக்கைக்காக, குறிப்பிட்ட தவணைகளில் தொடர்ந்து செலுத்தப்படும் தொகை, திரும்ப எப்படி சம்பந்தப்பட்ட நபருக்கு கிடைக்கிறது என்பதை, அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இது விஞ்ஞானபூர்வமான திட்டம் எனப்படுகிறது. அப்படி என்றால் என்ன, அது இன்றைய சூழலில் அவசியமா, அதனால் என்ன நன்மை, மேலும், அது நுகர்வோருக்கு எப்படி உதவுகிறது, என பல அடிப்படை விவரங்களை இந்த நூல் மிக எளிமையாக விளக்குகிறது. 127 பக்கங்கள் கொண்ட இந்த நூல் செங்குன்றம் மாவட்ட கிளை நூலகத்தில் கிடைக்கிறது. இந்த நூலாசிரியர் எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினமலர், 6/7/2014.