அசோகர்

அசோகர் பேரரசின் காலமும் பெருமையும், எம்.எஸ். கோவிந்தசாமி, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 168, விலை 85ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-188-2.html அசோகரின் பட்டத்தரசி அசந்திமித்ரா இறந்த பின் திஷ்யரஷிதாவைப் பட்டத்தரசியாக்கினார். திஷ்யரஷிதா தன் கணவன் புத்த சமயத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டினைக் கண்டு வெறுத்து, அதன் காரணமாய் போதி மரத்திற்கு இடையூறு (விஷமுள்ளால் குத்தி பட்டுப்போக) செய்திருக்க வேண்டும் (பக். 37) மகாவம்சம் கூறும் பல கதைகளையும், மூன்றாண்டிற்கு ஒருமுறை அதிகாரிகளை மாற்றுவதும் இருந்தது என்பது கலிங்க ஆணையால் அறியப்படுகிறது. (பக். 57) (தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது) இப்படி அசோகருடைய கற்பாறை ஆணைகள், கற்றூண் ஆணைகள் (கல்வெட்டுகள்) வெளியிடப்பட்ட கால ஆராய்ச்சிகள் பற்றியும் ஆதாரங்களோடு இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய நூலாகும். -பின்னலூரான். நன்றி: தினமலர், 30/3/2014.  

—-

தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு, ரா. வெங்கடேசன், சேகர் பதிப்பகம், பக். 328, விலை 220ரூ.

தமிழ்ப் புலமைச் சமூகத்தின் காலப் பெருவெளி நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. உலக மக்களினம் கை அசைத்து வாழ்ந்த காலத்தில், தமிழின் நாவசைத்து வாழ்ந்ததாக மொழி நூலறிஞர்கள் கூறுகின்றனர். இலக்கணம் வகுத்து இலக்கியம் கண்ட மொழி தமிழ். அந்த வகையில் செம்மொழியாம் செந்தமிழ்க் கல்வி வரலாற்றில், அச்சு நூல்களின் உருவாக்கம் அறிவுத் தேடலில், ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தது. கி.பி. 1800 வரை ஏடுகள் சார்ந்தே தமிழ்க் கல்வி வளர்ந்ததாக வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறுகின்றனர். கி.பி. 1821களில்தான் ஆங்கிலம் பிறந்த மொழிகளான தமிழ் இலக்கண நூல்கள் அச்சுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. மொழி ஆய்வாளர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்தரவல்ல நல்ல நூல். -குமரய்யா. நன்றி: தினமலர், 30/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *