மண் மொழி மக்கள்
மண் மொழி மக்கள், கவிஞர் வாலி, குமுதம் பு(து)த்தகம், சென்னை 10, விலை 75ரூ.
கவிஞர் வாலி குமுதம் இதழில் கடைசியாக எழுதி வெளிவந்த மண் மொழி மக்கள் தொடர் முற்றுப்பெறாமல் முடிந்த நிலையில் 10 வாரங்கள் மட்டும் வெளியான தொடர் புத்தகமாக வெளிவந்துள்ளது. ஒரு நாட்டில் வளமான மண்ணும், வளமான மொழியும் இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பதை நூலாசிரியர் ஆணித்தரமாக கூறி உள்ளார். வழக்கமான வாலியின் வார்த்தை ஜாலங்களும், பலரது வாழ்க்கை ஜாலங்களும் விரவிக் கிடப்பதுடன், அபூர்வ புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. வாலிபக் கவிஞர் வாலி என்ற தலைப்பில் அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் நூலில் சேர்த்திருப்பது மேலும் நூலுக்கு அழகு சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 26/3/2014.
—-
அலகிலா விளையாட்டுடையான், எஸ். கணேச சர்மா, கிரி டிரேடிங் ஏஜென்சி, மைலாப்பூர், சென்னை, விலை 150ரூ.
காஞ்சி மாமுனிவர், மஹா பெரியவர் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களிடையே பல அருள் லீலைகளையும், அற்புதங்களையும் நிகழ்த்தி உள்ளார். அவற்றில் சிலவற்றை நூலாசிரியர் புத்தகமாக தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 26/3/2014.
—-
வெற்றியாளர்களின் சூத்திரங்கள், பா. ராஜசேகரன், வேளாண்மைத்துறைத் தலைவர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சுதா பதிப்பகம், தூத்துக்குடி, விலை 200ரூ.
எந்தத் துறையாக இருந்தாலும், போட்டியிடும் பலரில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற முடியும். இவ்வாறு வெற்றியாளர்களாக ஜொலித்த அனைவரிடமும் பல சிறப்பு பண்புகள் பொதுவாக அமைந்துள்ளன. இந்த சிறப்பு பண்புகளை உள்ளடக்கினால் நாமும் வெற்றியாளராகத் திகழ முடியும் என்பதை உணர்த்தும் பொருட்டு, ஆங்கிலத்தில் வின்னர்ஸ் மந்த்ராஸ் என்ற தலைப்பில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/3/2014.