சங்க இலக்கியத்தில் குறிப்பு வினைகள்
சங்க இலக்கியத்தில் குறிப்பு வினைகள் (சொல்லடைவுடன்), சு.அழகேசன், சுதா பதிப்பகம், பக்.996, விலை ரூ.700. தொல்காப்பியம் முதல் இன்றைய இலக்கணங்கள் வரை குறிப்பு வினையின் இலக்கணங்களை இந்நூல் எடுத்துரைக்கிறது. தமிழ் இலக்கணத்தில் வினைகள் தெரிநிலை வினை, குறிப்பு வினை என இருவகைப்படும். வினைகளை வெளிப்படையாக உணர்த்துவன தெரிநிலை வினைகள்; குறிப்பாக உணர்த்துவன குறிப்பு வினைகள். இக்குறிப்பு வினைகள் பெரும்பாலும் காலத்தை உணர்த்துவதாகவே அமையும். தொல்காப்பியர் குறிப்பு வினைகளைப் பயன்படுத்தும்போது, ஆக்கப்பொருள் இல்லாத போதும், ஆகு எனும் வினையைப் பயன்படுத்தியுள்ளார். (எ.கா) நிலைத்து ஆகும்மே, பொருட்டு ஆகும்மே, […]
Read more