அடுப்படியே ஒரு மருந்தகம்

அடுப்படியே ஒரு மருந்தகம், ச.சிவ. வல்லாளன், விகடன் பிரசுரம், விலை 155ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-243-6.html வெள்ளைப் பூண்டு சாப்பிட்டால் அது ரத்த உறைவைத் தடுக்கும். இஞ்சி சாப்பிடுவோருக்கு இதய நோய் ஏற்படுவது இல்லை. மஞ்சள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இப்படி நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருள்களின் மருத்துவ குணங்களை எடுத்துக் கூறுகிறார் ச.சிவ. வல்லாளன். நன்றி: தினத்தந்தி.  

—-

காகிதப் படகில் சாகசப்பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.

சிறந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பெ. கருணாகரன், இதுவரை நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறார். இந்தப் புத்தகத்தின் மூலம் ஆனந்தவிகடன் தொடங்கிய மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் மூலம் பத்திரிகைத் திறமை, அனுபவம் காரணமாக பிரபல பத்திரிகைகள் பலவற்றில் பணியாற்றினார். அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். பார்வை இல்லாமல் பிறந்த தனது பெண் குழந்தைக்குப் பார்வை வரச் செய்ய அவர் மேற்கொண்ட முயற்சிகள் நெஞ்சை நெகிழச் செய்கின்றன. பல பிரபல பத்திரிகையாளர்களின் இயல்புகளை ரசிக்கும்படி வர்ணித்துள்ளார். பத்திரிகைத் துறையில் நுழைய விரும்புவோருக்கு இப்புத்தகம் சிறந்த வழிகாட்டி. இதழியல் கல்லூரிகளில் பாடநூலாக இருக்க தகுதி பெற்ற நூல். நன்றி: தினத்தந்தி, 5/11/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *