அடையாற்றில் இன்னோர் ஆலமரம்
அடையாற்றில் இன்னோர் ஆலமரம், ராணிமைந்தன், சென்னை, விலை 150ரூ.
எத்தனை எத்தனை போராட்டங்கள்… எத்தனை எத்தனை தடைகள்… எல்லாவற்றையும் ஜெயித்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தோற்றம், வளர்ச்சி உள்ளிட்ட வரலாறும், அம்மருத்துவமனையை உருவாக்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் கிருஷ்ண மூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகிய மும்மூர்த்திகளின் தியாக வரலாறும், அம்மருத்துவமனையை உருவாக்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் கிருஷ்ண மூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகிய மும்மூர்த்திகளின் தியாக வரலாறும் உள்ளடங்கியது இப்புத்தகம். சபிக்கப்பட்ட, தீர்க்கப்பட முடியாத நோயாகக் கருதப்பட்ட புற்றுநோயை எதிர்க்கும் போர்ப்பணியை லட்சிய நோக்காகக் கொண்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வரலாறு படிக்கப் படிக்க வியப்பு விரிகிறது. ஒரு தொடர் நாவல் படிக்கும் விறுவிறுப்பில் இதன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நூலாசிரியர் ராணிமைந்தன் படம்பிடித்திருக்கிறார். நோயைவிடக் கொடுமையான சிகிச்சைச் செலவு என்கிற வேதனையிலிருந்து நோயாளிகளை மீட்க இந்தப் புத்தகம் உதவும். நன்றி: தினத்தந்தி, 27/5/2015.
—-
ஜாதகாலங்காரம், டாக்டர் கே. என்.சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ.
ஜாதக பற்றிய பழம்பெரும் புத்தகம், நவீன வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு லக்கனத்திலும், நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை, சாஸ்திரத்தில் உள்ளபடி பிரசுரித்திருப்பதுடன் எளிய தமிழிலும் மொழி பெயர்த்துத் தந்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 27/5/2015