வர்மக் கலையின் கர்ப்பிணி அடங்கல்
வர்மக் கலையின் கர்ப்பிணி அடங்கல், டிராகன் டி. ஜெய்ரா4, ஸ்ரீகாளீஸ்வரி பப்ளிகேஷன்ஸ், கோவை, விலை 150ரூ.
பெண்களின் உடலில் அமைந்துள்ள அற்புதமான வர்மங்கள் கர்ப்பபையுடன் சம்பந்தப்பட்டு உள்ளன. அந்த வர்மங்களை இயக்குவதன் மூலம் மாதவிடாய் கோளாறு பிரச்சினை நீங்குகிறது. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை சுகப்பிரசவமாக பிறக்கிறது. இப்படி பெண்களுக்கு நன்மை பயக்கும் பல தகவல்களை எளிமையான முறையில் இந்த நூல் விளக்குகிறது. பெண்களுக்கு பெரிதும் பயன்தரக்கூடிய புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி, 20/5/2015.
—-
துளிர் விடும் விதைகள், வி. கிரேஸ் பிரதிபா, அகரம் பதிப்பகம், தஞ்சாவூர், விலை 100ரூ.
எல்லோருக்கும் அறிமுகமான பொதுவான செய்திகளை மொழி ஆர்வத்தோடு சொல்லாட்சியும், பொருள் வளமும் கொண்டு படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நூல். நன்றி: தினத்தந்தி, 20/5/2015.