அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்
அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ்., விகடன் பிரசுரம், விலை 90ரூ.
To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-284-4.html உலக அதிசயங்கள் ஏழு என்கிறோம். ஆனால் இந்த ஏழு அதிசயங்களைத் தவிர வேறு பல அதிசயங்களும் இருக்கின்றன. அவற்றில் பல மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட மர்மங்கள் குறித்து இந்நூல் ஆசிரியர் ஜி.எஸ்.எஸ். சுவைபட எழுதியிருப்பதோடு, மர்மமுடிச்சுகளையும் அவிழ்க்கிறார். நன்றி: தினத்தந்தி.
—-
நீதிநூல் களஞ்சியம், கொற்றவை வெளியீடு, விலை 720ரூ.
மனிதர்கள் இந்த உலகில் வாழ்வாங்கு வாழ வழிவகைகளைக் கூறி அவர்களை பேரின்பமாகிய வீடுபேற்றை அடைவதற்கு ஆற்றுப்படுத்துபவையே நீதி நூல்கள். அத்தகைய நீதி நூல்களான ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, நாலடியார், வெள்ளி வேற்கை, உலகநீதி, நன்னெறி, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, திரிகடுகம், ஏலாதி, இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, அறநெறிச்சாரம், நீதிவெண்பா, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி ஆகிய 22 நூல்களும் கவிஞர் பத்மதேவன், தமிழப்பிரியன் ஆகியோர் அழகிய முறையில் விளக்க உரை அளித்துள்ளார். விளக்க உரையை எளிய நடையில் உரைத்திருப்பதுடன், சொல்லுக்கு சொல் பொருள் கூறி இருப்பது, பாடலை முழுமையாக புரிந்து கொள்ள உதவுகிறது. 1056 பக்கங்கள் கொண்ட பெரிய நூல். நன்றி: தினத்தந்தி, 5/11/2014.