அப்பா சிறுவனாக இருந்தபோது

அப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின், தமிழில் நா. முகமுது ஷெரிபு, மறுவடிவம் ஈஸ்வர சந்தான மூர்த்தி, புக்ஸ் ஃபார் சில்ரன்.

உங்களுக்குச் சாப்பிடப் பிடிக்குமா, எல்லாவற்றையும் சாப்பிடப் பிடிக்குமா? நிச்சயமாகப் பிடிக்காது இல்லையா? அப்படி ஒரு சிறுவன். தினசரி பிரெட்டைச் சாப்பிட மறுத்து, அதைத் தரையில் வீசி எறிகிறான். யார் சொல்லியும் அந்தச் சிறுவன் பிரெட்டைச் சாப்பிடவில்லை. கடைசியாக அடுத்த நாள் காலையில் இருந்து சிறுவனுக்கு பிரெட்டே தரப்படவில்லை. குளிர்பானங்களும் தரப்படவில்லை. இரவுச் சாப்பாடும் இல்லை. பிரெட் இல்லாமல் காலையில் சீஸ், மதியம் கட்லெட், இரவில் பிரெட் இல்லாத பொரித்த முட்டையை மட்டுமே சாப்பிட்டதால், அவன் எப்போதும் பசியுடனே இருந்தான். ஓராண்டு முழுக்க அவனுக்குப் பிரெட்டே கிடையாது என்றார்கள். ஆனால் அதற்கடுத்த நாள் காலை சிறிய பிரெட் துண்டு ஒன்று தரப்பட்டது. அது ரொம்பச் சுவையாக இருந்தது. அந்தச் சிறுவன் அதைச் சாப்பிட்டான். அதற்குப் பிறகு பிரெட்டை அவன் தரையிலும் வீசவில்லை. சாப்பிடவும் மறுக்கவில்லை. இப்படிச் சிறு வயதில் நாம் ஒவ்வொருவரும் செய்த எத்தனையோ சுட்டித்தனங்கள், லீலைகளை விவரிக்கும் கதைதான் அப்பா சிறுவனாக இருந்தபோது. நன்றி: தி இந்து, 23/4/2014.

—-

சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி, தமிழில் பாஸ்கர் சக்தி, விகடன் வெளியீடு, விலை 95ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-867-7.html

சிறுவன் சார்லிக்கு சாக்லேட் என்றால் உயிர். சாக்லேட் தயாரிப்பில் மர்ம மனிதராகத் திகழும் வோன்காவின் ஃபேக்டரியை தினமும் கடந்து செல்லும் சார்லிக்கு, அந்தத் தொழிற்சாலைக்கு உள்ளே போய்ப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை.

ஒரு முறை, அந்த நிறுவனம் தயாரித்த ஐந்து சாக்லேட்டுகளில் தங்க டிக்கெட் வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தச் சாக்லேட்டுகளை வாங்குபவர்களுக்கு வோன்காவின் ஃபேக்டரியை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.

அந்த ஐந்து டிக்கெட்டுகளும் கிடைத்த குழந்தைகள் ஃபேக்டரியில் அடிக்கும் லுட்டிதான் கதை. பிரிட்டன் எழுத்தாளர் ரோல் தாலின் கதைகள் சஸ்பென்ஸும் சுவாரஸியமும் நிரம்பியவை. ஃபேக்ட்ரியை பார்ப்பதை மிகப் பெரிய கனவாகக் கொண்டிருக்கும் சார்லியின் கையிலும் அந்த டிக்கெட் கிடைக்கிறது.

நன்றி: தி இந்து, 23/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *