இசையின் சித்திரங்கள்

இசையின் சித்திரங்கள், எம்.எஸ். சுப்புலட்சுமி, எழுத்து லக்ஷ்மி தேவ்நாத், ஹெரிடேஜ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, விலை 72ரூ.

சித்திரமடலில் இசையரசி காமிக்ஸ் என்று வழங்கப்படுகிற வண்ணம் சித்திர மடலாக இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தந்திருக்கிறார்கள் ஹெரிடேஜ் வெளியீட்டகத்தார். லக்ஷ்மி தேவ்நாத் எழுதி, ஓவியர் அரஸ் கைவண்ணத்தில் வெளியாகியுள்ள இச்சிறு நூலில் குழந்தை சுப்புலக்ஷ்மி குஞ்சாவிலிருந்து, உச்ச நிலையை எட்டி அமரத்துவம் பெறுகிறவரை, ஒரு குறும்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தோடு படித்தும் பார்த்தும் மகிழலாம். அடிக்குறிப்பு விவரங்களில் அரியக்குடி போன்றவர்களின் காலமும் தரப்பட்டிருப்பது பயனுடையது. எடிட்டர் என்று சாருகேசியின் பெயர் காணப்படுகிறது. அவரையும் மீறிச் சில உறுத்தல்கள் கண்ணில் படுகின்றன. இயக்குநர் சுப்ரமண்யம் என்று உரையாடலில் வருகிறது. அந்த நாள்களில் டைரக்டர் சுப்ரமண்யம் என்றுதான் சொல்வார்கள். அப்படியே கல்கி இதழ் 1941ல் தொடங்கப்பட்ட பிறகுதான் கிருஷ்ணமூர்த்தி கல்கி என்று அழைக்கப்படலானார் என்பதும் சரியானதல்ல. அவர் ஆனந்த விகடனில் பணியாற்றுவதற்கு முன்பே கல்கி ஆகிவிட்டார். ஆனால் இந்த உறுத்தல்கள், படிக்கும் வாசகர்களைப் பாதிப்பதற்கில்லை. அம்மாவின் சங்கீதம் போல் அனுபவித்து மகிழலாம். நன்றி: கல்கி, 8/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *