அமிர்தம்
அமிர்தம் (சிறுகதை இரண்டாம் தொகுதி), எஸ். ஷங்கர நாராயணன், சு. வேணுகோபால், நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, பக். 176, விலை 85ரூ.
தீனிப்பிரியர்களை சாப்பாட்டு ராமன்கள் என சாடுகிறோம். ஆனால் ரசித்துச் சாப்பிடுவதிலும், ருசித்துச் சாப்பிடுவதிலும் ஆர்வம் கொள்ளாதவர்கள் யார்? அது தவிர இந்த நாட்டில் ஒரு பட்டினிப் பட்டாளம் இருக்கிறது. அடுத்த வேளைச் சோறு எங்கே கிடைக்கும்? என தெரியாத நிலை. பசி பற்றியும், ருசி பற்றியும் உணவு பற்றியும் இலக்கியத்தரமான 18 கதைகள் அடங்கிய புதையல்.
—-
நல்ல நல்ல அறிவுரைக் கதைகள் (சிறுவர் கதைகள்), மணிகண்டன், நாகம்மை நிலையம், 43/18, எஸ்.பி.எஸ். முதல்தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 192, விலை 70ரூ.
பத்திரிகைகளைத் தவிரவும் சிறுவர்கள் படிக்கும் ஆர்வத்திற்கு துணை நிற்பது, பதிப்பகங்கள் வெளியிடும் இத்தகைய சிறுவர் நூல்களே, இவை நூலகத்தில் இடம் பெறுவதால் மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துவந்து படிக்கவும் முடிகிறது. சிறுவர்களுக்காகவே எழுதப்பட்ட 65 சிறுவர் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. -சி.டி.எஸ். நன்றி: தினமலர், 23/10/2011.