பாரதமே உயிர்த்தெழு

பாரதமே உயிர்த்தெழு, சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 205, விலை 55ரூ. சுவாமி விவேகானந்தரின் பேச்சும், எழுத்தும் இளைஞர்களின் மனதில் ஆழப்பதிந்தால், இந்திய தேசம் வலிமையும், பெருமையும் பெரும் என்பதில் ஐயமில்லை. விவேகானந்தரின் சொற்பொழிவுகளையும், எழுத்துக்களையும் சுருக்கி ஆறு தலைப்புகளில் இந்நூல் விளக்குகிறது. கல்வியானது ஞானத்தை வெளிப்படுத்தி, மனிதனாக உருவாக்கி, தன்னம்பிக்கை, நற்பண்புகள், அறிவு, பண்பாடு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற விவேகானந்தரின் கூற்றை இன்றைய கல்வியாளர்கள் சிந்தித்து பார்க்க, இந்நூல் பெரிதும் பயன்படும். […]

Read more

அமிர்தம்

அமிர்தம் (சிறுகதை இரண்டாம் தொகுதி), எஸ். ஷங்கர நாராயணன், சு. வேணுகோபால், நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, பக். 176, விலை 85ரூ. தீனிப்பிரியர்களை சாப்பாட்டு ராமன்கள் என சாடுகிறோம். ஆனால் ரசித்துச் சாப்பிடுவதிலும், ருசித்துச் சாப்பிடுவதிலும் ஆர்வம் கொள்ளாதவர்கள் யார்? அது தவிர இந்த நாட்டில் ஒரு பட்டினிப் பட்டாளம் இருக்கிறது. அடுத்த வேளைச் சோறு எங்கே கிடைக்கும்? என தெரியாத நிலை. பசி பற்றியும், ருசி பற்றியும் உணவு பற்றியும் […]

Read more

போர்க்குற்றவாளி

பண்பாட்டு அரசியல், சி. சொக்கலிங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட். அம்பத்தூர், சென்னை 98. பக்கங்கள் 244, விலை 125 ரூ. தமிழக கலை இலக்கியப் பெருமன்றத்தின், குமரி மாவட்டக் குழுவில் பிரதான அங்கம் வகிக்கும் இந்நூலாசிரியர் கடந்த 30 ஆண்டுகளில் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வகுப்பு வாதம், ஊடகம், மாற்றப்பண்பாடு, மதிப்பீடு என்று நான்கு தலைப்புகளில் அமைந்திருக்கும் கட்டுரைகள் யாவுமே நயமானவை. வானியல் முகமூடியில் ஜோதிட பூதம் (வகுப்பு வாதம்), […]

Read more

யாளி

அமிர்தம் தொகுதி 1,  நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், சென்னை – 75, பக்கம் 184, விலை 90 ரூ. ‘ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா’ என்று நம்மிடையே கூற்றொன்று உண்டு. ஒரு சாண் வயிறுக்கு படித்தவன், பாமரன், ஏழை, பணக்காரன் என்கிற எந்தப் பேதமும் இல்லை. பிறப்பு, இறப்புக்கு நடுவில் அனைவருக்கும் பொதுவானதான உணர்வு பசி. மொத்தம் இத்தொகுப்பில் உள்ள 14 சிறுகதைகளும் 14 ரகம். அத்தனையும் தனி ரகம். […]

Read more