குருபக்தி மிக்க குட்வின்

குருபக்தி மிக்க குட்வின் (சுவாமி விவேகானந்தரின் வலது கை), நாரை, ச.நெல்லையப்பன், ராமகிருஷ்ண மடம், பக்.102, விலை ரூ.70. சுவாமி விவேகானந்தரின் உரைகள் அனைத்தும் நூலாகத் தொகுக்கப்பட்டு விவேகானந்த இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. அதற்கு அடிப்படைக் காரணமானவர், அப்பணியை சிரமேற்கொண்ட பத்திரிகையாளர் ஜே.ஜே.குட்வின். அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுக வரலாறே இந்நூல். 1893 செப்டம்பர் 11-இல் அமெரிக்காவின் சிகாகோவில் நிகழ்ந்த சர்வ சமயப் பேரவையில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைக்குப் பிறகு உலகப் புகழ் பெற்றவரானார். அதன் பிறகு பல நாடுகளில் ஆன்மிகப் பிரசாரம் […]

Read more

என் பிள்ளைகளுக்குப் பரீட்சை

என் பிள்ளைகளுக்குப் பரீட்சை, சுவாமி விமூர்த்தானந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 67, விலை 25ரூ. உள்ளுணர்வுக் கதைகள் என்று அழைக்கப்பெறும் 15 சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன படிக்கப் படிக்கச் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது. சிறுவர்கள் விரும்பிப் படிக்கவும் நல்ல வழியில் சிந்தனையை வளர்க்கும் படியான கதைகளைக் கொண்டிருப்பது சிறப்பு. அஃறிணையிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியருக்கிறது என்பதை அந்தப் பூனைகளின் குடும்பம், கொசு தர்மம் போன்ற கதைகள் உணர்த்துகின்றன. அன்பு என்ற கதை, […]

Read more

இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல், முத்துநாடு பப்ளிகேஷன், 48/31, புதூர், அக்ரகாரம், தேவகோட்டை 630302, விலை – முதல் தொகுதி ரூ.600, இரண்டாம் தொகுதி ரூ 750. வானொலியில் தினமும் ஒரு தகவலைச் சொல்லி, மக்களை சிந்திக்கச் செய்தவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். தகவலுடன் சேர்த்து அவர் சொன்ன குட்டிக்கதைகள் அழகானவை. அற்புதமானவை. அவர் சொன்ன நூற்றுக்கணக்கான குட்டிக்கதைகள், இரண்டு பெரும் நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளை படிப்பு, அறிவு, பந்தபாசம், மனித இயல்புகள் இவ்வாறு பொருள் வாரியாகத் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது. எல்லா நூல் நிலையங்களிலும் இடம் […]

Read more

பாரதமே உயிர்த்தெழு

பாரதமே உயிர்த்தெழு, சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 205, விலை 55ரூ. சுவாமி விவேகானந்தரின் பேச்சும், எழுத்தும் இளைஞர்களின் மனதில் ஆழப்பதிந்தால், இந்திய தேசம் வலிமையும், பெருமையும் பெரும் என்பதில் ஐயமில்லை. விவேகானந்தரின் சொற்பொழிவுகளையும், எழுத்துக்களையும் சுருக்கி ஆறு தலைப்புகளில் இந்நூல் விளக்குகிறது. கல்வியானது ஞானத்தை வெளிப்படுத்தி, மனிதனாக உருவாக்கி, தன்னம்பிக்கை, நற்பண்புகள், அறிவு, பண்பாடு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற விவேகானந்தரின் கூற்றை இன்றைய கல்வியாளர்கள் சிந்தித்து பார்க்க, இந்நூல் பெரிதும் பயன்படும். […]

Read more

முல்லை பெரியாறு – வைகை அணைக்கட்டுகளின் பசுமை வரலாறு

முல்லை பெரியாறு – வைகை அணைக்கட்டுகளின் பசுமை வரலாறு, எஸ். வர்க்கீஸ் ஜெயராஜ், பக். 150, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை – 14. விலை ரூ. 150 முல்லை பெரியாறு அணை கட்டப்பட்ட வரலாறும், அதற்கடுத்து பல ஆண்டுகள் கழித்து வைகை அணை கட்டப்பட்டதன் வரலாறும் மிகச் சுருக்கமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் பின் இணைப்பில் உள்ள குறிப்புதவி நூல்கள் மற்றும் அரசு ஆணைகள், பத்திரிகைக் குறிப்புகள் ஆகியன இந்த நூலின் புள்ளிவிவரங்கள் ஓர் ஆவணம் என்பதை மெய்ப்பிக்கின்றன. பெரியாறு அணையில் பென்னிகுக்கின் […]

Read more