திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை

திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை, தெளிவுரை ம. ராமகிருஷ்ணன், திருப்புகழ்ச் சங்கமம் வெளியீடு, சென்னை 90, பக்கம் 232, விலை 120 ரூ. முனைவர் ம. ராமகிருஷ்ணன், திருப்புகழ் நெறி பரவுதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆன்மிகப் பணியில் தற்போது முழுமையாக ஈடுபட்டுள்ள இவர், ‘வரிசைதரும் பதம் அதுபாடி வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே’ என்னும் அருணகிரிநாரின் வரத்தைப் பெற்றவர். ஒரே பொருளை பலவிதமாக வகுத்தும், தொகுத்தும், சொல்லும் நூல் வகைக்கு வகுப்பு என்று பெயர். இதில் சீர்பாத […]

Read more

போர்க்குற்றவாளி

பண்பாட்டு அரசியல், சி. சொக்கலிங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட். அம்பத்தூர், சென்னை 98. பக்கங்கள் 244, விலை 125 ரூ. தமிழக கலை இலக்கியப் பெருமன்றத்தின், குமரி மாவட்டக் குழுவில் பிரதான அங்கம் வகிக்கும் இந்நூலாசிரியர் கடந்த 30 ஆண்டுகளில் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வகுப்பு வாதம், ஊடகம், மாற்றப்பண்பாடு, மதிப்பீடு என்று நான்கு தலைப்புகளில் அமைந்திருக்கும் கட்டுரைகள் யாவுமே நயமானவை. வானியல் முகமூடியில் ஜோதிட பூதம் (வகுப்பு வாதம்), […]

Read more

இமய குருவின் இதய சீடன்

சூரியன், சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்தி சிவா பப்ளிகேஷன்ஸ், பக்கம் 176, விலை 120 ரூ. சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் என, இதுவரை 10 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் சாந்தகுமாரி சிவகடாட்சத்தின் புதிய நாவல் சூரியன். கிராமம், நகரம் என, இரண்டு வழிகளில் பயணிக்கும் இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களை, அவரவர் இருப்பிடத்திற்கே உரிய குணங்களோடு, ஒப்பனை இன்றி படைத்துள்ளார் ஆசிரியர். இன்றைய, இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப் போக்கின் மீது தனக்குள்ள வருத்தத்தை, ‘சூரியன்’ நாவலில் ஆழமாக பதிவு செய்துள்ளார். நாவல் பிரியர்களுக்கு நல்ல தீனி.   […]

Read more

யாளி

அமிர்தம் தொகுதி 1,  நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், சென்னை – 75, பக்கம் 184, விலை 90 ரூ. ‘ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா’ என்று நம்மிடையே கூற்றொன்று உண்டு. ஒரு சாண் வயிறுக்கு படித்தவன், பாமரன், ஏழை, பணக்காரன் என்கிற எந்தப் பேதமும் இல்லை. பிறப்பு, இறப்புக்கு நடுவில் அனைவருக்கும் பொதுவானதான உணர்வு பசி. மொத்தம் இத்தொகுப்பில் உள்ள 14 சிறுகதைகளும் 14 ரகம். அத்தனையும் தனி ரகம். […]

Read more

நெருஞ்சி

நெருஞ்சி- முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்; பக்.159; ரூ.75; அனுராதா பப்ளிகேஷன்ஸ், கும்பகோணம் -ஆர்எம்எஸ், 612605 உலகின் நான்கு திசைகளிலும் மக்கள் வாழ்வை உலுக்கிக் கொண்டிருக்கும் கொடியோர் வெறியாட்டத்தை உரத்துப் பேசும் நாவல். துணிவு,ஆற்றல் அறிவு கொண்ட ஈழத் தமிழச்சியாக கொற்றி என்ற கார்த்தியாயினி பாத்திரம் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது. “அந்தப் பொம்பள கிட்ட எந்த ஆயுதமும் செல்லாது, நாமெல்லாம் அடியாளுங்க; அந்த அம்மா போராளிடா’ என்று துணை பாத்திரம் மூலம் கொற்றியின் வீரத்தைப் பறைசாற்றுகிறார் ஆசிரியர். நாவலைத் தொய்வின்றி நடத்திச் செல்வதில் பூவாயி, அண்ணாமலை, முகிலன் […]

Read more