வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு,

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம். இந்நூல் தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளியிடப் பெற்றதாகும். இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து அமைக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதி வரலாற்றுப் பகுதி, 37 தலைப்புகளில் அமைகிறது. நூலாசிரியரின் புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய கட்டுரைகள் உடுக்குறிகள் இட்டுக் காட்டப்பட்டுள்ளன. சேரன் செங்குட்டுவன் படையெடுப்பால் ஏற்பட்ட அவமானத்தைப் போக்கவே களப்பிரர் என்ற இனத்தினர், தமிழகத்தின் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர் (பக். 50). இதுபோன்று வருவன […]

Read more

நெருஞ்சி

நெருஞ்சி- முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்; பக்.159; ரூ.75; அனுராதா பப்ளிகேஷன்ஸ், கும்பகோணம் -ஆர்எம்எஸ், 612605 உலகின் நான்கு திசைகளிலும் மக்கள் வாழ்வை உலுக்கிக் கொண்டிருக்கும் கொடியோர் வெறியாட்டத்தை உரத்துப் பேசும் நாவல். துணிவு,ஆற்றல் அறிவு கொண்ட ஈழத் தமிழச்சியாக கொற்றி என்ற கார்த்தியாயினி பாத்திரம் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது. “அந்தப் பொம்பள கிட்ட எந்த ஆயுதமும் செல்லாது, நாமெல்லாம் அடியாளுங்க; அந்த அம்மா போராளிடா’ என்று துணை பாத்திரம் மூலம் கொற்றியின் வீரத்தைப் பறைசாற்றுகிறார் ஆசிரியர். நாவலைத் தொய்வின்றி நடத்திச் செல்வதில் பூவாயி, அண்ணாமலை, முகிலன் […]

Read more