காளவாய்

காளவாய், கு.வெ. பாலசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 190, விலை 145ரூ. காலம் காலமாக அச்சத்தின் வழிநடக்கும் அடிமை மனநிலையில் அமைந்த பெண்கள் மற்றும் சமூகத்தின் மவுனத்தை, உறுதியான எதிர்ப்பு மனநிலையோடு, ஆவேசத்தோடு மாற்றம் கொள்ளும் சாத்தியங்களை உருவாக்கி காட்டுகிறது இந்த நாவல். சமூக அநீதிகளுக்கு எதிரான பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் ஒருங்கிணைந்த குரலாக ஓங்கி ஒலிக்கிறது நாவல். நீதியையும், நேர்மையையும் அறவழியில் நிலைநாட்டும் முயற்சியில் ஒவ்வொரு கதாபாத்திரமும் போராடுவதும், இறுதியாக உண்மையும் தர்மமும் நிலைநாட்டப்படுவதும் சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்கின்றன. ஆங்காங்கே பளிச் […]

Read more

பறந்து மறையும் கடல் நாகம்

பறந்து மறையும் கடல் நாகம், ஜெயந்தி சங்கர், காவ்யா, விலை 1000ரூ. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கன்பியூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ் மூதாதையர் வழிபாடு, பெற்றோரை மதித்துப் பேணிக் காத்தல், ஆண் வாரிசுகளை உருவாக்குதல் போன்ற மூன்று முக்கிய அலகுகளைச் சுற்றி உருவானதே சீனக் கலாசாரம். அத்தகைய சீனக் கலாசாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழர் பண்பாட்டுடன் சீனப் பண்பாடு பல வகைகளில் ஒத்துப் போகிறது. இது குறித்தும், சீனப் பெண்களின் குடும்ப வாழ்க்கை, அவர்களின் அடிமைத்தனம், சமூக சிக்கல்கள், […]

Read more

சிலம்பில் ஈடுபட்டது எப்படி

சிலம்பில் ஈடுபட்டது எப்படி, ம.பொ. சிவஞானம், ம.பொ.சி. பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுவதற்கு காரணமாக அமைந்த உணர்வுகளை, மனம் திறந்து ம.பொ.சிவஞானம் பேசும் நூல். மனைவி ராஜேஸ்வரி, நான் கண்ணகியாய், ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பேன் என்று கூறிய வீரவுரையைக் கேட்ட பிறகு ம.பொ.சி இந்த தலைப்பில் நீண்ட ஆய்வு செய்து இந்த நூலை அவருக்கே அஞ்சலி ஆக்கியுள்ளார். 1934ல் வெளியான நவீன கோவலன், 1946ல் கண்ணகி, 1966ல் பூம்புகார் ஆகிய திரைப்படங்களால் சிலப்பதிகாரம் தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றதை […]

Read more

சிறுவருக்கு மகாபாரதம்

சிறுவருக்கு மகாபாரதம், பழனியப்பா பிரதர்ஸ், விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-146-0.html மகாபாரதம் மகா சமுத்திரம் போன்றது. இதில் உள்ள கதைகளை, எளிய தமிழ் நடையில் அழகாக வடித்திருக்கின்றனர். பகாசுரன் கதை, அபிமன்யூ வீரம் ஆகியவை உட்பட, 170 சம்பவங்கள் கதைகளாக வண்ணப்படத்துடன் அமைந்திருக்கின்றன.   —-   சிந்தனைத் துளிகளும் சின்னச் சின்னக் கதைகளும், கு.வெ. பாலசுப்பிரமணியன், விலை 45ரூ. சிறந்த கருத்துக்களை எளிதாக படிக்க வசதியாக எழுதப்பட்ட நூல். நூற்றாண்டு கால வழியும் இதில் […]

Read more

நெருஞ்சி

நெருஞ்சி- முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்; பக்.159; ரூ.75; அனுராதா பப்ளிகேஷன்ஸ், கும்பகோணம் -ஆர்எம்எஸ், 612605 உலகின் நான்கு திசைகளிலும் மக்கள் வாழ்வை உலுக்கிக் கொண்டிருக்கும் கொடியோர் வெறியாட்டத்தை உரத்துப் பேசும் நாவல். துணிவு,ஆற்றல் அறிவு கொண்ட ஈழத் தமிழச்சியாக கொற்றி என்ற கார்த்தியாயினி பாத்திரம் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது. “அந்தப் பொம்பள கிட்ட எந்த ஆயுதமும் செல்லாது, நாமெல்லாம் அடியாளுங்க; அந்த அம்மா போராளிடா’ என்று துணை பாத்திரம் மூலம் கொற்றியின் வீரத்தைப் பறைசாற்றுகிறார் ஆசிரியர். நாவலைத் தொய்வின்றி நடத்திச் செல்வதில் பூவாயி, அண்ணாமலை, முகிலன் […]

Read more