பறந்து மறையும் கடல்நாகம்

பறந்து மறையும் கடல்நாகம், சீனக் கலாசார கட்டுரைகள், ஜெயந்தி சங்கர், காவ்யா பதிப்பகம், பக். 1038, விலை 1000ரூ. சீனாவின் பண்பாடு, பெண்களின் நிலை, உணவு முறைகள், அதிகார கட்டமைப்பு பற்றிய ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தும் நூல் இது. கன்பூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ், மூதாதையர் வழிபாடு, ஆண் வாரிசை உருவாக்குதல், பெற்றோரை மதித்து பேணிக்காத்தல் ஆகிய மூன்று முக்கிய பண்பாட்டு அலகுகளைச் சுற்றி உருவாக்கப்பட்டதே சீனக் கலாசாரம். இரண்டாம் உலகப் போருக்குப் பின், சீனாவில் நிலவிய பிரச்னைகளை களைய, விவசாய துறையில் நவீன […]

Read more

பறந்து மறையும் கடல் நாகம்

பறந்து மறையும் கடல் நாகம், ஜெயந்தி சங்கர், காவ்யா, விலை 1000ரூ. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கன்பியூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ் மூதாதையர் வழிபாடு, பெற்றோரை மதித்துப் பேணிக் காத்தல், ஆண் வாரிசுகளை உருவாக்குதல் போன்ற மூன்று முக்கிய அலகுகளைச் சுற்றி உருவானதே சீனக் கலாசாரம். அத்தகைய சீனக் கலாசாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழர் பண்பாட்டுடன் சீனப் பண்பாடு பல வகைகளில் ஒத்துப் போகிறது. இது குறித்தும், சீனப் பெண்களின் குடும்ப வாழ்க்கை, அவர்களின் அடிமைத்தனம், சமூக சிக்கல்கள், […]

Read more

ஜெயந்தி சங்கர் நாவல்கள்

ஜெயந்தி சங்கர் நாவல்கள், ஜெயந்தி சங்கர், காவ்யா, சென்னை, பக். 1014, விலை 1000ரூ. மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களிடம் பணம் இருக்கும். படைப்பாற்றல் இருக்காது என்ற சில இலக்கியவாதிகளின் கருத்து, ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள் என்ற நாவலைப் படித்தால் உடைந்துபோகும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருதுபெற்ற இந்த நாவல், தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் புலம்பெயர்ந்தும் வாழும் பல பெண்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டது. அவர்களது மனப்புண்களைக் காட்டிச் செல்வதோடு, வாசனையும் வலிகொள்ளச் செய்ய, கதாபாத்திரங்களை இன்னும்கொஞ்சம் கூடுதலாகப் பேசவிட்டிருக்கலாம். அல்லது வலியின் அடியாழத்துக்கு […]

Read more

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள், ஜெயந்தி சங்கர், காவ்யா, சென்னை, விலை 880ரூ. சிங்கப்பூர் சூழ்நிலையில் உருவான சிறுகதைகள் உலகப் பெண்களின் உள்ளார்ந்த வலிகளையும், நகர எந்திரங்களுக்கு இடையே நசுங்கிவிடாமலும் உலகமயமாதலால் உடைந்து நொறுங்கிப் போகாமலும் மனிதனை நூலாசிரியர் ஜெயந்தி சங்கரின் கதைகள் காப்பாற்றுவதுடன், கை கொடுக்கும் வகையில் 99 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைகளிலும் ஈரம் அதிக அளவில் இருப்பதால் அனைவருடைய மனதையும் எளிதாக தொட்டுவிடுகிறது. நூலாசிரியர் மதுரையில் பிறந்து, சிங்கப்பூரில் வசித்தாலும், தனது நாட்டையும், மக்களையும் தனது படைப்புகள் மூலம் […]

Read more