ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்
ஜெயந்தி சங்கர் சிறுகதைகள், ஜெயந்தி சங்கர், காவ்யா, சென்னை, விலை 880ரூ.
சிங்கப்பூர் சூழ்நிலையில் உருவான சிறுகதைகள் உலகப் பெண்களின் உள்ளார்ந்த வலிகளையும், நகர எந்திரங்களுக்கு இடையே நசுங்கிவிடாமலும் உலகமயமாதலால் உடைந்து நொறுங்கிப் போகாமலும் மனிதனை நூலாசிரியர் ஜெயந்தி சங்கரின் கதைகள் காப்பாற்றுவதுடன், கை கொடுக்கும் வகையில் 99 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதைகளிலும் ஈரம் அதிக அளவில் இருப்பதால் அனைவருடைய மனதையும் எளிதாக தொட்டுவிடுகிறது. நூலாசிரியர் மதுரையில் பிறந்து, சிங்கப்பூரில் வசித்தாலும், தனது நாட்டையும், மக்களையும் தனது படைப்புகள் மூலம் எளிய மொழியில் உயிர்ப்புடன் எழுதி உள்ளார். திரிசங்கு, நுடம், தையல், ஈரம், நாலேகால் டாலர், தம்மக்கள் போன்ற சிறுகதைகள் படிப்பதற்கு ஆர்வமாக இருப்பதுடன் சிந்திக்கவும் வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 30/4/2014.
—-
ஓஷோ சிவ சூத்திரம், சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 320ரூ.
ஆன்மாவை தெரிந்து கொள்வதற்கும் பரிதாக எதையும் செய்ய வேண்டியது இல்லை. சலனம் இல்லாமல் உள் மனதை ஆழமாகப் பார்ப்பதன் மூலம் ஆன்மாவை அறியலாம் என்பது போன்ற வித்தியாசமான வழிமுறைகளை கற்றுக் கொடுக்கும் ஓஷோ, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது ஆசிரமத்தில் எந்தவித முன் ஏற்பாடும் இல்லாமல் மடை திறந்த வெள்ளம் போல, கூறிய அற்புதமான வாசகங்கள், தமிழில் மிக அருமையாக தரப்பட்டுள்ளது. நெருடலோ, சிக்கலோ இல்லாமல், ஓஷோ நம்முடன் சரளமாக பேசுவது போன்ற தொணியில் கொடுத்து இருப்பதுடன், ஓஷோ கூறிய சிறு கதைகளையும் தந்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 30/4/2014.