காளவாய்

காளவாய், கு.வெ. பாலசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 190, விலை 145ரூ. காலம் காலமாக அச்சத்தின் வழிநடக்கும் அடிமை மனநிலையில் அமைந்த பெண்கள் மற்றும் சமூகத்தின் மவுனத்தை, உறுதியான எதிர்ப்பு மனநிலையோடு, ஆவேசத்தோடு மாற்றம் கொள்ளும் சாத்தியங்களை உருவாக்கி காட்டுகிறது இந்த நாவல். சமூக அநீதிகளுக்கு எதிரான பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் ஒருங்கிணைந்த குரலாக ஓங்கி ஒலிக்கிறது நாவல். நீதியையும், நேர்மையையும் அறவழியில் நிலைநாட்டும் முயற்சியில் ஒவ்வொரு கதாபாத்திரமும் போராடுவதும், இறுதியாக உண்மையும் தர்மமும் நிலைநாட்டப்படுவதும் சமூக நம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்கின்றன. ஆங்காங்கே பளிச் […]

Read more

பறந்து மறையும் கடல் நாகம்

பறந்து மறையும் கடல் நாகம், ஜெயந்தி சங்கர், காவ்யா, விலை 1000ரூ. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கன்பியூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ் மூதாதையர் வழிபாடு, பெற்றோரை மதித்துப் பேணிக் காத்தல், ஆண் வாரிசுகளை உருவாக்குதல் போன்ற மூன்று முக்கிய அலகுகளைச் சுற்றி உருவானதே சீனக் கலாசாரம். அத்தகைய சீனக் கலாசாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழர் பண்பாட்டுடன் சீனப் பண்பாடு பல வகைகளில் ஒத்துப் போகிறது. இது குறித்தும், சீனப் பெண்களின் குடும்ப வாழ்க்கை, அவர்களின் அடிமைத்தனம், சமூக சிக்கல்கள், […]

Read more