பெண்ணியம்

பெண்ணியம், முனைவர் இரா.பிரேமா, பாரி புத்தக நிலையம், பக். 216, விலை 90ரூ. பெண்ணியம்’ என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம், சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. உண்மையில், பெண்ணியத்தின் நோக்கம் அதுவன்று; காலம் காலமாக அடிமைப்பட்டு, வதைப்பட்டு வாழும் பெண்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியின் மூலம் விழிப்புணர்வு ஊட்டி, சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கமும் செயல்பாடும் ஆகும். இந்த இலக்கை அடைய ஆண்கள் தடையாகும்போது மட்டுமே அவர்கள் எதிரிகளாகின்றனர். இன்று பெண்ணியம் பற்றி முழுவதுமாக […]

Read more

பெண்ணியம்

பெண்ணியம்,  இரா.பிரேமா, பாரி புத்தக பண்ணை, பக்.216, விலை ரூ.90. பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானது அல்ல; காலம் காலமாக அடிமைப்பட்ட பெண்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, கல்வியின் மூலமாக அவர்களை வளர்த்தெடுத்து உயர்த்துவதே பெண்ணியத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். பெண்ணியம் எவ்வாறு தோன்றியது? அது தோன்றுவதற்கான பின்னணி, உலக அளவில் பேசப்படும் பெண்ணிய வகைகள், பலவிதமான பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் கருத்துகள் என விரிவாக இந்நூல் பேசுகிறது. வேத காலத்தில் யாக்ஞவல்கியருடன் வாதிட்ட கார்கி போன்ற பெண்மணிகளும் இருந்திருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக கல்வி கற்பது, […]

Read more

திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை

திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை, தெளிவுரை ம. ராமகிருஷ்ணன், திருப்புகழ்ச் சங்கமம் வெளியீடு, சென்னை 90, பக்கம் 232, விலை 120 ரூ. முனைவர் ம. ராமகிருஷ்ணன், திருப்புகழ் நெறி பரவுதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆன்மிகப் பணியில் தற்போது முழுமையாக ஈடுபட்டுள்ள இவர், ‘வரிசைதரும் பதம் அதுபாடி வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே’ என்னும் அருணகிரிநாரின் வரத்தைப் பெற்றவர். ஒரே பொருளை பலவிதமாக வகுத்தும், தொகுத்தும், சொல்லும் நூல் வகைக்கு வகுப்பு என்று பெயர். இதில் சீர்பாத […]

Read more