அமுதும் தேனும்
அமுதும் தேனும், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 242, விலை 150ரூ.
முப்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ‘மூத்தோர் சொல்’ என்ற அத்தியாயத்தில், விவேகானந்தர், ரமண முனிவர், ராஜாஜி, நாமக்கல் கவிஞர், தமிழறிஞர் வ.அய். சுப்பிரமணியன், ஏர்வாடியார் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் அத்தனையும் அற்புதம். ‘இலக்கிய அமுது’ என்ற தலைப்பில் அகநானூறு, புறநானூறு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், ஆசிரியரின் ஆழ்ந்த தமிழ் அறிவுக்கு சான்றாய் அலங்கரிக்கின்றன. இக்கால கவிஞர்களின் படைப்புகள் பற்றி தனி ஒரு அத்தியாயம். அதில் புதுக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூ கவிஞர்களின் படைப்புகளை, காலத்தால் அழியாத இலக்கிய படைப்புகளோடு ஒப்பிட்டு, ஆசிரியர் எழுதியிருப்பது அந்த படைப்பாளிகளுக்கு பெருமை தரும். தியாரூ என்ற கவிஞரின், ‘தணியாத தாகம் நீ, தழுவாத மேகம் நீ. தாவணியில் தங்கச்சுரங்கம்’ என்ற வரிகளை வள்ளுவரின், ‘மலரினும் மெல்லிது காமம்’ என்ற வரிகளோடு ஒப்பிடுகிறார். -ஜிவிஆர். நன்றி: தினமலர், 27/12/2015.