அரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும்
அரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும், நர்மதா வெளியீடு, பக். 328, விலை 180ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023950.html ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியாவில் வாழ்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்டது சித்த மருத்துவம். சித்தர்கள் தங்களின் தவ வலிமையால் எல்லா விதமான மூலிகைகள், தாதுக்கள், ஜீவராசிகள் ஆகியவற்றின் தன்மைகளையும், மருத்துவ குணங்களையும் முழுமையாகக் கண்டறிந்தனர். அவற்றை மனித சமூகத்திற்குப் பயன்படுத்த எண்ணினர். அதன் அடிப்படையில் சுமார் 4,448 நோய்களுக்கான நிவாரணங்களை இந்த மூலிகைகளின் மூலம் கூறியுள்ளனர். அப்படி சித்தர்களால் கூறப்பட்ட முக்கியமான, நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சில மூலிகைகள் குறித்த விவரங்களை, அரவிந்த் ஹெர்பல் ஆரோக்கிய நிலைய மருத்துவக் குழு இந்நூலில் தொகுத்துள்ளது. இதில் சுமார் 145 மூலிகைகளைப் பற்றித் தனித்தனியே கூறப்பட்டுள்ளது. அதாவது மூலைகையின் தாவரப்பெயர், வேறு மொழிகளிலுள்ள பெயர்கள், அம்மூலிகையைப் பற்றிய பொதுக் குறிப்பு, அதன் மருத்துவக் குணங்கள், அம்மூலிகையைக் கொண்டு நோய் தீர்க்கும் முறைகள், மருந்து தயாரிக்கும் முறைகள், அவற்றின் நச்சுத் தன்மையை நீக்கும் முறைகள், சாப்பிடும் முறை என்று அனைத்து விவரங்களும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. இவற்றை காட்சியாகப் பார்த்து புரிந்து கொள்ள சி.டி.யாகவும் இதே விலையில் நூலுடன் இணைத்துத் தந்துள்ளனர். சித்த மருத்துவத்தில் ஈடுபாடு உள்ள அனைவருக்கும் இந்நூல் நல்ல பயனளிக்கும். -பரக்கத். நன்றி: துக்ளக், 28/1/2015.