போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்
போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், எஸ். குருபாதம், மணிமேகலைப் பிரசுரம், பக். 304, விலை 200ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023529.html யாழ்ப்பாணத் தமிழரான இந்நூலாசிரியர், பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி வருபவர். போதிதர்மரைப் பற்றிய அற்புதமான பல விஷயங்களைத் தேடிப் பிடித்து இந்நூலில் தொகுத்துள்ளார். புத்த பெருமானின் மறுஅவதாரமாகப் பேசப்படும் போதி தர்மர், தமிழகத்தில் தோன்றிய பௌத்த ஞானியாவார். இவர் ஆன்மிகம் மட்டுமின்றி, அறிவியல், தற்காப்புக் கலை, அக்குபஞ்சர், சித்த மருத்துவம், உடல் உறுப்புகள் தானம் பற்றிய மருத்துவ விஞ்ஞானம், நோக்கு, வர்மக்கலை, தியானம்… என்று பல கலைகளையும் உலகிற்கு வழங்கிய முன்னோடி. இந்நூல் இவரை மட்டுமின்றி, புத்தர், மஹாவீர், தர்மரட்சா, புத்தபத்திரா, குமாரஜீவா, பரமார்த்தா, பட்டினத்தார், ஷீரடி பாபா, ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர் என்று ஏராளமான இந்திய ஞானிகளைப் பற்றியும் கூறுகிறது. இது தவிர, கிறிஸ்தவம், இஸ்லாம், இஸ்லாத்திலுள்ள சூஃபி மார்க்கம், ஜென் தத்துவம், கன்ஃபியூசியஸ் தத்துவம், லா-சூ தத்துவம், சைதன்யர்கள், ஹொடாய் என்ற சிரிக்கும் புத்தர்… என்று பல செய்திகளும் இந்நூலில் பதிவாகியுள்ளன. தவிர, சீடர்களின் சந்தேகங்களுக்கு போதிதர்மரின் பதில்கள், சீனப் பேரரசர் வூவுடன் ஏற்பட்ட முரண்பாடு, சீனப் பேரரசர் வெய்க்கும் போதிதர்மருக்கும் நடந்த உரையாடல், கிரேக்க நாட்டு தத்துவ ஞானி தியோஜினிஸுக்கும் மாவீரன் அலெக்ஸாண்டருக்கும் நடந்த உரையாடல்… என்று பல்வேறு விஷயங்கள், அரிய புகைப்படங்களுடன் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மத நல்லிணக்கவாதிகளுக்கும், ஆன்மிக தத்துவத் தேடல் உள்ளவர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும். -பரக்கத். நன்றி: துக்ளக், 15/7/2015.