அறிஞர்கள் பார்வையில் கண்ணியம் குலோத்துங்கன்
அறிஞர்கள் பார்வையில் கண்ணியம் குலோத்துங்கன், இராம. குருமர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
கடந்த 45 ஆண்டுகளாக கண்ணியம் என்ற பத்திரிகையை நடத்தி வருபவர் முனைவர் ஆ.கோ. குலோத்துங்கன். 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். இவர் தொழிற்சங்கவாதி. அதனால் இவர் வேலை பார்த்த நிறுவனத்தில் வேலை நீக்க உத்தரவை கொடுத்தனர். அது ஆங்கிலத்தில் இருந்ததால், அதை வாங்க மறுத்து தமிழ் கொடுத்தால்தான் வாங்குவேன் என்று போராடி, தமிழில் பெற்றார். இது இவருடைய தமிழ்ப் பற்றுக்கு எடுத்துக்காட்டு. அவரைப் பற்றி தமிழறிஞர்கள், கவிஞர்கள், பிரமுகர்கள் எழுதிய பாராட்டுரைகளின் தொகுப்பு நூல். நன்றி: தினத்தந்தி, 21/10/2015.
—-
மனிதத்தில் மாண்புகள், ஆங்கிலம் சத்யவிரத சாஸ்திரி, தமிழில் ராஜலட்சுமி சீனிவாசன், விலை 450ரூ.
மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகள் எவை என்பதை எடுத்துக்கூறும் நூல். சில கருத்துக்களை விரிவாக விளக்க, மகாபாரதத்தில் இருந்தும் ராமாயணத்தில் இருந்தும் எடுத்துக் காட்டப்படும் மேற்கோள்கள் அருமை. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.