அழகைத்தேடி
அழகைத்தேடி, ஜோதிர்லதா கிரிஜா, சேது அலமி பிரசுரம், ஜி-7, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 224, விலை 125ரூ.
அழகான பெண்களை வயப்படுத்தி, ஆபாச வீடியோ எடுத்து சட்டத்துக்குப் புறம்பாய் செயல்படும் ஒரு சிறு கூட்டம். அதற்குத் துணை போகும் போலீஸ், வசதியை வைத்து அழகிய பெண்ணை மடக்க நினைக்கும் ராஜாதிராஜன், அவன் வலையில் சிக்காத அழகான வயசுப் பொண்ணு சூர்யா. பலான பிசினஸ் பண்ணும் தண்டபாணி இவர்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதைதான் என்றாலும், வழக்கமான பாணியிலேயே முடிவு அமைந்துள்ளது. ஜோதிர்லதா கிரிஜாவின் படைப்புகளை படிப்பவர்கள் இதில் அதிகம் எதையும் எதிர்பார்க்க முடியாது. சராசரி பொழுதுபோக்கு நாவல் இது. -பின்னலூரான்.
—-
கந்தர் அலங்காரம், மும்பை ராமகிருஷ்ணன், சாஸ்தா பதிப்பகம், பக். 366, விலை 200ரூ.
கந்தர் அலங்காரம் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம். அதற்கு இதுவரை பலர் உரை செய்துள்ளனர். இந்த நூலில் ஆசிரியர் எளிய உரைநடை மூலம் ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லி இருக்கிறார். பாடல், அதற்கான திரண்ட பொழிப்புரையாக, இரண்டு அல்லது மூன்று வரிகளில் விளக்கம், அதன் பின், பாடலின் உட்கருத்து, அதற்கேற்ப மகான்கள் பலரின் வாழ்வில் நடந்த அருள் நிகழ்ச்சிகள், பாடலின் கருத்தை சுட்டிக்காட்டும் பிற மகான்கள் பாடிய பாடல்களின் மேற்கோள்கள் என, கோர்வையாக அடுக்கியுள்ளார். கந்தர் அலங்காரத்தில், திருச்செங்கோடு தலத்தை ஆறு இடங்களில் குறிப்பிடும், அருகிரிநாதர், தனது சேத்திரக்கோவை திருப்புகழில் அதை குறிப்பிடாதது ஏன் என, தெரியவில்லை என சுட்டியுள்ளார் ஆசிரியர். வாசிக்க பாராயணம் செய்ய எளிமையான நூல். -சொக்கன். நன்றி: தினமலர், 24/11/13. கந்தர் அலங்காரம், மும்பை ராமகிருஷ்ணன், சாஸ்தா பதிப்பகம்